பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எத்தனையோ பிரம்மச்சாரிகள் எவ்வளவோ நிம்மதியாக வாழ்கிறாள்கள் தெரியுமா? இந்த சம்சார சாகரத்தில் என்னைப் போய் ஏன் தான் அழுத்தப் பார்க்கிறார்களோ அம்மா? அது தான் எனக்குப் புரியவில்லை என்று வாசுவே வாதத்தைக் கிளப்பினான்.

சம்சார சாசுரம் என்றாயே? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? என்று பேச்சை தொடங்கியதால், தாய் மாமனை அர்த்தம் புரியாமல் பார்த்தான் வாசு.

சம்சாரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு அர்த்தம் நான் கூறுகிறேன். சம் என்றால் நல்ல என்று அர்த்தம். சாரம் என்பது நல்லவைகளிலிருந்து நல்லவைகளைப் பெறுதல் என்று பொருள் தரும். நல்லவைகளிலிருந்து நல்லனவற்றை வாழ்க்கையில் நிறையப் பெறுவதைத்தான் சம்சார சாகரம் என்கிறார்கள் என்று விளக்கம் கூறினார் உலகநாதர்.

ஏதோ அர்த்தம் சொல்லி என்னை ஏய்க்கப் பார்க்கிறீர்கள். ஏதோ சொர்க்கம் என்று எண்ணிக்கொண்டு தேடிப் போய் கல்யாணம் செய்து கொண்டு, கழுத்தறுப்பட்ட கோழி போல, உடல் தொடர்பையிழந்த பல்லியின் வால் போல, மக்கள் துடிப்பதைப் பார்த்தால், இது போல அர்த்தம் சொல்ல உங்களுக்கு எப்படி மாமா மனம் வந்தது? என்று மாமாவை மடக்கினான் வாசு.

கல்யாணம் செய்து கொண்டவர்கள் எல்லோரும் கஷ்டப்படுகிறாள்கள், துடிக்கிறாள்கள், துவள்கின்றாள்கள் என்று உனக்கு யார் சொன்னது?

"தினந்தோறும் தான் நான் பார்க்கிறனே? கல்யாணம் செய்து கொள்வதற்குமுன், அழகான உடையணிந்து கொண்டு, சிரித்த முகமாக, களையான முகத்துடன்