பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
35
 


எவ்வளவு தெளிவாகத் தொகுத்து சொல்லியிருக்கிறாள்கள் பார்த்தாயா!

யாரோ ஒருவர் என்றீர்கள்! ஒரு பெண்ணின் மனதைக் தவருவதற்கு ஏதாவது தகுதி வேண்டாமா? ஒரு பெண்ணின் நட்பைப் பெறுவதற்கு ஏதாவது பெருமை வேண்டாமா? எத்தகைய ஆண்களைப் பெண்கள் விரும்புகின்றார்கள் என்பதை எனக்கு விளக்கமாகக் கூறமுடியுமா?

நிச்சயமாகக் கூறுமுடியும். அதையும் நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றார்கள். ஆண் என்றாலே ஆண்மையானவன் என்று தானே அர்த்தம். அத்தகைய ஆண்மையுள்ள ஆண் இனத்தில் சிறந்தவன் என்று மனம் விரும்பினால் தானே, ஒரு பெண்ணின் மனம் லயிக்க முடியும்.!

நல்ல வீரம் நிறைந்தவன்; நயம்பட பேசத் தெரிந்தவன்; நங்கையரிடம் நாசூக்காக நடந்து கொள்ளத் தெரிந்தவன்; நங்கையர்விருப்பத்தைத் தெரிந்து கொண்டு, அதனை பூர்த்தி செய்ய முயன்று, அதிலும் வெற்றி பெறுகிறவன் வீர தீர சாகசச் செயல்களை அநாயாசமாகச் செய்து முடிப்பவன், நல்ல இளமையும் உடற்கட்டும் நிறைந்தவன்; தான் வசிக்கும் பகுதியிலே நிறைந்த செல்வாக்கு உடையவன்; செல்வ வசதி அதிகம் உள்ளவன், ஒரு பெண்ணுடல் இளமையிலிருந்தே பழகி விடுபவள்; பெண்ணின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்கிறவன்.

- இத்தகைய அருங்குணங்களில் ஏதாவது ஒரு சிசிசத்தில், அருஞ்செயல்களில் ஏதாவது, ஒன்றில் சிறந்த சின்களைப் பெண்கள் பெரிகம் விரும்பவார்கள்.