பக்கம்:மனை ஆட்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24


24

தா. அரைக்காசுக்கா ஆசைப்பட்டாய் ? நீ ரவை அ ட் டி கைக்காக ஆசைப்பட்டாயென்று எண்ணினேனே!


இ ன் ைற க் கு அட்டிகைக்கு வேண்ட வேண்டும் நாளைக்கு கை வளையலுக்கு வேண்ட வே ண் டு ம் ! எப்பொழுதும் பிச்சை யெடுப்பதுதானே என் கதி ! நான் ஒரு மனைவியாகப் பாவிக்கப் படுகிறேன? எதிர் அகத்து (ஆத்து) லட்சுமி தன் புருஷன், அவன் சம்ப ளம் அவ்வளவையும், மாசம் முதல் தேதி, தன்கையில் கொடுத்து விடுவதாகச் சொல்கிறாளே- -


தா. கொடுத்துவிட்டு மாசத்தில் மற்ற நாட்களெல்லாம் அவளிடம் பிச்சை கேட்கிறானோ?


பா. புருஷர்களைப்போல் பெண்சாதிமார்கள் அவ்வளவு அநியாயக்காரிகள் அல்ல நீ என்ன சொல்கிறாய் சகுந் தலா ?


ச. நான் எப்பொழுதும் மனைவியாக வாழ்ந்த தில்லையே அம்மா, ஆகவே எனக்குத் தெரியாது. ஆயினும் விதவைகளாகிய நாங்கள் எப்பொழுதும் மிகவும் நியா யமாக நடந்து கொள்கிறோம் என்பது நிச்சயம் உங்களுக்கு அப்படித் தோற்றவில்லையா அம்மா ?

பா. அம்மட்டும், வி த ைவ க ள் தங்கள் புருஷர்களிடம் பிச்சை கேட்கவேண்டிய நிமித்தியமில்லை.

தா. அவசரப்படாதே பார்வதி ! உனக்கும் காலக்கிர மத்தில் அப்பதவி கிடைக்கலாம் பார்.

பா. விதவையாகி யார் உயிர்வாழ விரும்புவார்கள் ?

தா. அதோ தோ! அழ ஆரம்பிக்காதே!-எழுந்திருந்து ஏதாவது சாப்பிடப் போ.

பா. மாட்டேன்! நான் எழுந்திருக்க மாட்டேன்; இப்ப டியே பட்டினிகிடந்து சாகப்போகிறேன்--இவ்விடத் திலேயே!-நீங்கள் இனிமேலாவது எ ன் னை ஒரு அடிமையாகவும் பிச்சைக்காரியாகவும் பாவிக்காது,'உமது மனைவியாகப் பாவிப்பதாக வாக்குக் கொடுக்கா விட்டால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/28&oldid=1415113" இலிருந்து மீள்விக்கப்பட்டது