பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படிப் போவாள்! 69

இந்த விஷயத்தைத் தலைவியின் தாய் நினைத்துப் பார்த்தாள். அந்தச் சிறிய பெண், நேற்றுப் பிறந்த பெண், கொடி போலத் து:வளும் பெண் அவ்வளவு கடுமை யான பாலை நிலத்தின் வழியாக எப்படிப் போவாள்' என்ற நினைவு தாய்க்கு உண்டாயிற்று. பாவம்! நம் மகள் பெண்; ஆண்மையின் துணையை அவாவும் பருவம் அவளுக்கு உண்டு என்பதை அவள் தாய்மறந்துவிட்டாள். எத்தனை காலமானலும் அவள் குழந்தையாக, தன் கண் காணிப்பில் வளரும் கன்ருகவே இருப்பாள் என்பது அவள் எண்ணம். என்ன பேதைமை!

அந்தத் தாய் பாலை நிலத்தின் கொடுமைகளை நாலு பேர் சொல்லக் கேட்டிருக்கிருள். அவற்றையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிருள். அவள் வயிறு பகீரென்கிறது. தன் மகளின் இயல்பை நினைக் கிருள். 'உலகம் அறியாத பெண் ஆயிற்றே அவளா இப்படித் துணிந்துபோள்ை?' 'அம்மா! அம்மா!' என்று அறுபது நாழிகையும் ஒட்டிக் கொண்டு வாழ்கிறவள், ஒன்றும் அறி யாத பெண்- அவளா பிரிந்து போளுள்? நம்பத் தக்கதாக இல்லையே! ஆனால் அந்தப் பெண் பிரிந்து போனது என்ன வோ உண்மைதான்.

பாலை நிலத்தில் அவள் போவதாகக் கற்பனை செய்து பார்க்கக்கூடத் தாய் நடுங்கிள்ை. வேனிற்காலம் மற்ற இடங்களிலெல்லாம் வரும்; சில காலம் இருக்கும்; போய் விடும். பாலை நிலத்தில் ஆண்டு முழுவதுமே வேனிற் காலமாகத்தான் இருக்கும்போல் தோன்றுகிறது. பல இடங்களுக்குப் போய் அங்கங்கே உள்ள மக்களைப் பார்க் கும் அரசன் நிலையாக இராசதானி நகரத்திலே இருப் பான். அப்படி இந்த வேனில் என்ற அரசனுக்கு இராசதானியே பாலை நிலந்தானே? அங்கே வேனில் நில்ை யாக நிற்குமென்று சொல்கிருர்களே. அப்படி கின்ற வேனிலில் என்ன வளப்பம் இருக்கும் முன்பு இருந்த புல்