பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மனே விளக்கு

பூண்டுகளெல்லாம் எரிந்து மயானம் போல அல்லவா ஆகிவிடும்? குறிஞ்சி நிலப் பகுதியாக இருந்த இடம் அது

அப்போதெல்லாம் காந்தள் படர்ந்து குலைகுலையாகப் பூத்திருக்கும். நிலையாக நின்ற வேனிற் காலத்தில் காந்தள் வளர்வதாவது! அது காய்ந்து போயிருக்குமே! தழைத்த காந்தளைக் காண அங்கே வழியில்லை; உலர்ந்த காந்தளைக் காணலாம்.

காந்தள் உலர்ந்தது; மரங்கள் வாடிக் கருகின; கதிரவன் அழலையே வாரிச் சொரிகிரு:ன். அங்கே நிற்க நிழல் ஏது? எங்கே பார்த்தாலும் நெருப்புப் போலத் தகிக்கிறது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரையில் நீண்ட இடம் முழுவதும் அழல் பரவியிருக்கிறது. இந்த அழல் அவிர்கின்ற நீள் இடையிலே மனிதன் தங்க நிழல் கிடைக் காது என்பது கிடக் கட்டும். மலைச் சாரலிலும் அதை யடுத்த காடுகளிலும் வாழ்ந்திருந்த விலங்குகள் அங்கே இப்போது எப்படி வாழ்கின்றன?

பாலை நிலத்தைப் பற்றிக் கதை கதையாகப் போய் வந்தவர்களெல்லாம் சொல்லிக் கேட்டவள் அன்னை. ஆகவே அவர்கள் கூறிய செய்திகளெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன. நேரே பாலை நிலத்துக்குப் போய்ப் பாராவிட்டாலும், காதினலே கேட்ட செய்தி களெல்லாம் இப்போது அவளுடைய அகக் கண்ணிலே ஒரு பெரிய பாலை நிலத்தைப் படைத்து நிறுத்தின.

பாலை நிலத்தில் வேனில் நிலையாக நிற்கிறது. காந்தள் உலர்ந்து போயின. எங்கே பார்த்தாலும் அழலே அவிர் கின்ற நீண்ட இடம் அது. வளம் இருந்த காலத்தில் விலங்கினங்கள் பல வாழ்ந்திருந்தன. அவற்றில் பல இப் போது மங்கி மடிந்தன. வேனிலின் கொடுமைதான் காரணம். சில சில, உடம்பில் உயிரைத் தாங்கிக் கொண்டு பிழைத்திருக்கின்றன,