பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படிப் போவாள்! 71

இரண்டு புலிகள்: ஒன்று பெண்; ஒன்று ஆண்; நல்ல காலத்தில் அந்த இடத்தில் இன்புற்று வாழ்ந்தவை அவை, பாலை நிலமான பிறகும் அவை அங்கேயே இருக்கின்றன. பிற வளப்பங்கள் இல்லாமற் போனுலும் ஆணும் பெண் ணும் உறவு செய்யும் அன்புக்கு இன்னும் பஞ்சமில்லை. பெண் புலி இப்போது கருவுற்றிருக்கிறது. அதனுடைய வயிற்றிலே குட்டிகள் வளர்ந்தன. கருவுயிர்க்கும் காலம் வந்தது. இயற்கை தன் வேலையை யாருக் காக நிறுத்தப் போகிறது? குட்டிகளைப் பெண் புலி ஈன்று விட்டது. குட்டிகளைக் காவல் காத்துக் கொண்டு நின்றது. அதன் குட்டிகளுக்கும் அதற்கும் இரை வேண்டுமே இரையைத் தேடி நல்ல இடத்துக்குப் போகலாமென்ருல் அதனல் முடியவில்லை. ஆண் புலி அருகில் இருந்தது கொஞ்ச தூரம் புலிகளும் குட்டிகளும் சென்றன. பெண்புலிக்குக் காலோ சோர்கிறது. கால் மடிந்த அந்தப் பெண் புலி தங்குவதற்கு நிழலே இல்லை. கிழலான இடம் பெருமல், கால் மடிந்து வாடிய பெண் புலிக்கு, ஈன்று நின்ற பிணவுப் புவிக்கு, பசி மிகு தியாகி விட்டது. பசியினல் வேதனை யுற்றுத் துள்ளியது அதைப் பார்க்கச் சகிக்கவில்லை ஆண் புலிக்கு, எப்படியாவது அதற்கு இரையைத் தேடி அளித்துவிட்டுத்தான் வேறு காரியம் பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தது ஆண்.

அதற்கு அங்கே என்ன இரை கிடைக்கப் போகிறது? மான, மரையா? நரிகூட இல்லாமல் உயிரற்ற நிலப்பரப் பாக அல்லவா ஆகிவிட்டது அது? பகலின் வெம்மை சிறிது அகன்றது. மாலை மெல்லத் தலையை நீட்டியது. பெண் புலிக்குப் பசித் தழல் அதிகமாகிவிட்டது. புறத்தே உள்ள அழல் குறைந்தது; ஆனல் அதன் வயிற்றிலே பசி யழல் மூண்டு கொழுந்துவிட்டது. இப்போது இருட்டி விட்டது; பொருள்கள் புலப்படாமல் மயக்கத்தை உண் டாக்கும் மால்ை வந்தது. ஆண் புலி இரை தேடப் புறப் பட்டது.யாராவது அந்தப்பக்கத்தில் உள்ள கரடுமுரடான