பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மனை விளக்கு

வழியிலே சொல்வார்களென்று எண்ணி அந்த நெறிக்கு அருகே பதுங்கியிருந்தது. வெயிலின் கொடுமை தாங்கா மல் எங்கேனும் தங்கிவிட்டு வெயில் தாழ்ந்தவுடன் நடக் கத் தொடங்கிய பிரயாணிகள் அந்த நேரத்தில் அங்கே வரவுங் கூடும். யாராவது அப்படி அவ்வழியே வந்தால் அவர்களை அடித்துப் பசி கூர்ந்த பெண் புலிக்கு அளிக்க லாம் என்று ஆண்புலி பதுங்கியிருந்தது.

அந்த வழி குறுகிய சிறு நெறி; யாரோ சிலபேர் நடந்து சுவடுபட்ட ஒற்றையடிப் பாதை. அதை வழியென்று சொல்வதே தவறு. சோலையோ சாலையோ ஒன்றும் இல் லாத அந்தச் சுடுகாட்டில் எப்போதோ என்ருே ஒருவர் இருவர் போவார்கள். அவர்கள் அடிச்சுவடுபட்டுத் தட மான வழி அது; பொலிவற்ற புன்மையான அதர்; சிறிய நெறி. அந்த வழிக்கு அருகில்தான் புலி பதுங்கியிருந்தது .

தாயின் உள்ளத்தே நின்ற பாலையின் கோலம் இது. ‘புலி வழங்குவோரைச் செகுக்கும் பொருட்டுப் பார்த்து உறையும் சிறு நெறியிலே இந்தப் பெண் எப்படிப் போ வாள்! அதற்கு ஏற்ற மன வன்மையும் உடம்பு வன்மையும் அவளுக்கு ஏது?’ என்று நினைக்கும்போதே அவள் தலை சுழன்றது.

ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி அப்போது தாய்க்கு நினைவுக்கு வந்தது. தலைவி எப்போதும் தாயின் பக்கத் திலே படுத்துத் துயில்பவள்; அவளுடைய அணைப்பிலே பயமின்றித் துயில்பவள். அன்று அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டு படுத்திருந்தாள் தாய். அப்போது தன் கையைக் கொஞ்சம் தளர்த்தினுள். தலைவி பருவம் வந்த பெண் அல் லவா? அவள் நகில்கள் பருத்திருந்தன; உயர்ந்திருந்தன. தொய்யில் முதலியவற்ருல் அலங்காரம் செய்து கொண்