பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படிப் போவாள் 73

டிருந்தாள். அந்த இள நகில்கள் இறுக அணப்பதல்ை நோவை அடையும் என்று தாய் நினைத்தாள். அதனல் கையைச் சிறிதே நெகிழ்த்தாள்.

அவள் தன் மகளைத் தனியே விட்டுச் செல்லவில்லை; அவள் படுக்கையை விட்டுத் தனியே வேறு படுக்கையில் படுக்கவும் இல்லை; திரும்பியும் படுக்கவில்லை; கையைக்கூட எடுக்கவில்லை. இறுக்கி அணைத்த கையைக் கொஞ்சம் தளர்த்தினுள். இந்த இளைய பெண்ணின் மார்பை நம் முடைய முரட்டுக் கை உறுத்துமே!’ என்ற நினைவில்ை நெகிழ்த்தாள். அவ்வளவுதான் அதற்கு அவள் எவ்வளவு அமர்க்களப்படுத்திவிட்டாள்!

அவள் பெரிய கண்களில் நீர் துளித்தது; அழத் தொடங்கி விட்டாள். ஒன்ருேடு ஒன்று மாறுபட்டு அமர் புரியும் பெரிய குளிர்ச்சியான கண்கள்-பேரமர் மழைக்கண் -ஈரமடையும்படி கலுழ்ந்தாள். பெருமூச்சு விட்டாள். அதில்தான் எத்தனை வெப்பம்! அவள் எத்தனை மென்மை யானவள்! அவள் அழுதபோது, அடி பைத்தியமே. நான் எங்கே போய்விட்டேன்? உன் பக்கத்திலேதான் இருக்கி றேன்” என்று தாய் சொல்வி ஆறுதல் செய்தாள். "பின்னே ஏன் இறுக்கிக் கட்டிக் கொள்ளவில்லை?” என்று மகள் விம்மினள். தாய் அவள் தலையைக் கோதிச் சமா தானம் செய்தாள். கன்னங் கறேலென்று நெய்ப்போடு கூடிய அழகான அவள் க்த்தல் தாயின் நினைவுக்கு வந்தது. மிக மிக அறியாப் பெண், மடப்பத்திலே பெரியவள்; அவள் அறியாத் தன்மை எவ்வளவு பெரியது!

அப்படி இருந்தவள் எப்படிப் பிரிந்து சென்ருள் எவ்வாறு அவளுக்குத் துணிவு வந்தது: மையிர் ஒதியை உடைய பெருமடத் தகையினள்ாகிய அவள் கொடிய பாலே நிலத்திலே போக எப்படி வல்லவளாவாள்? -