பக்கம்:மனோகரா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3 மனோஹரன் 97

£f .

ج: گرائم

քrir

tt :

சத்தியசீலரே, இது உண்மைத்ானோ? என்ன காரணத் திற்காக மஹாராஜா இவ்வாறு கட்டளையிட்டார் ?

அம்மணி, உண்மைதான், தாங்களே நேரிற் பார்த்துக் கொள்ளலாம். (உத்தரவைக் கையில் கொடுத்து) அம்மணி, தாங்களெல்லோரும் ஏ ன் வருத்தப்ப்ட் வேண்டும்? என்னாலாவது ஒன்றுமில்லை. நான் இவ் வுலகில் இனி பெறப்போகிற சுகம் ஒன்றுமில்லை; என் அற்ப உயிரைத் தங்கள் பொருட்டும் மனோஹரர் பொருட்டும் விடுவதைவிட வேறு எனக்கென்ன உயர்ந்த கதி வேண்டும்? ஆகவே நாணிறக்கச் சித்தமாயிருக்

(எழுந்திருந்து) சத்தியசீலரே! இம் மாற்றங் கூற வேண்டாமென்று உமக்கு நான் எத்தனை முற்ை சொல்வது? இன்னொரு முறை இதைக் கூறுவீராயின் நான் இன்னது செய்வேனென்று சொல்லமாட்டேன் என்னுயிருள்ளளவும் என் பொருட்டு ஒரு எறும்பும் இறக்கச் சம்மதியேன் நான்!

(உத்தரவைத் திருப்பிக் கொடுத்து) மஹாராஜா இதற்கு ஒரு காரணமுங் கூறவில்லையா?

அம்மணி, நான் எவ்வளவோ நியாயங்களைக் கூறிப் பார்த்தேன்! எவ்வளவோ வேண்டினேன்! ஒரு காரண முங் கூற மாட்டேனென்றார்.

சத்தியசீலரே, இப்போதிதற்கென் செய்வது?

என்ன செய்வதாவது? என்ன செய்வதாவது அம்மணி, இன்னும் சந்தேகமா? இவ்வளவிற்கும் அத்துஷ்டை வசந்தசேனை காரண மாயிருக்கிறாள்? என்பதற்குச் சந்தேகமில்லை. அவள் தான் இவ்வாறு மஹாராஜாவுக்குப் போதித்திருக்க வேண்டும், அவளை உடனே கொன்றுவிட்டால், பிறகு நாம் மஹாராஜாவை வசப்படுத்திக்கொள்ளலாம். பிறகு ந ம து துயரமெல்லாம் பறந்தோடிப்போம். அம்மணி, என்ன சொல்லுகிறீர்கள்? நான் உமது கட்டளையை மீறி நடக்கமாட்டேன் என்பது உமக்கே தெரியும். ஆதலால். ஒரு வார்த்தை சொல்லும் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/106&oldid=613503" இலிருந்து மீள்விக்கப்பட்டது