பக்கம்:மனோகரா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மனோஹரன் (அங்கம்-1

மாயிரம் யானைகள் குதிரைகள் ஆபரணங்கள் முதலிய வற்றையெல்லாம் அனுப்பியிருக்கிறதாகவும்: அதைக் கண்டு அரண்மனைச் சேவகர்களெல்லாம் சந்தோஷத் துடன் ஆரவாரம் செய்கிறதாகவும் கூறச்சொன்னார். அதுவுமன்றி அதிவீரசேர மஹாராஜனுடைய வஜ்ஜிர சிங்காதனத்தைப் பாண்டியனிடமிருந்து மீட்டுத் தன் தாயாரிடமும் இளவரசர் அனுப்பியிருக்கிறதாகவும் சொல்லச் சொன்னார்.

எங்கே அந்த சிம்மாசனம்? பத்மாவதியிடம் போய்ச் சேர்ந்து விட்டதா ?

தோ : இல்லை, இப்பொழுதுதான் அதை மஹாராஜாவுக்குக்

துன்ை :

காண்பித்துவிட்டு அந்த அரண்மனைக்கு எடுத்துச் (செல்கிறார்கள் சேவகர்கள்.

நீ உடனே ஒடிச்சென்று அந்த ஆட்களை நான் கட்டளையிட்டதாகக்கூறி, மறுபடியும் மஹாராஜா விடம் அதை எடுத்துப் போகச் சொன்னதாகச் சொல். விரைந்து செல். பத்மாவதியிடம் அந்தச் சிம்மாசனம் போய்ச் சேருமாயின் உன்னை அரண்மனையினின்றும் நீக்கிவிடுவேன்,

தோ ஒரு வேளை பட்டத்து ராணி கோபித்துக் கொண்டால்

வனை : நான்தான் இப்போது பட்டத்து ராணி போ, நான்

சொன்னபடி செய். இல்லாவிட்டால் மஹாராஜவிடம் கூறி உன்னைச் சிரச்சேதம் செய்து விடும்படி செய் வேன்! என்முன் நில்லாதே! அறைக்கு வெளியில் பிடித் துத் தள்ளுகிறாள். சி. நான் இப்ப்தினாறு வருஷங். களாக மஹாராஜாவுடன் வாழ்ந்த வாழ்வெல்லாம் எதற்காயது? எப்படியிருந்தபோதிலும் பத்மாவதியை எல்லோரும் இன்னும் பட்டத்து ராணி என்று தானே அழைக்கிறார்கள். எப்படியிருக்கினும் ஜனங்க்ளெல் லாம் என்னை மஹாராஜாவின் வைப்பாகப் பாவிக் கிறாாகளேயொழிய அ வ ைள மதிக்கிறதுபோல என்னை மதிக்கிறார்களா? இல்லையே! அதற்கென்ன. என் முன்பாகப் பயந்து என்னைத் துதித்தபோதிலும், அவர்களுடைய மனத்தில் என்ன நினைக்கிறார்களென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/25&oldid=613287" இலிருந்து மீள்விக்கப்பட்டது