பக்கம்:மனோகரா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) மனோஹரன் 43

ரன :

இரண்டாவது அங்கம்

முதல் காட்சி

இடம்-மஹாராஜாவின் கொலு மண்டம். காலம்-பகல்.

புருஷோத்தம மஹாஜரான் சிங்காதனத்தின்மீது வசந்த சேனையுடன் வீற்றிருக்கிறார், ஒரு புறமாக வசந்தன், விகடன், அமிர்தகேசரி முதலானோர் உட்காந்திருக்

கிறார்கள்.

மற்ருெருபுறம் ரணவீர கேது முதலான மந்திரி பிரதானி கள் உட்கார்ந்திருக்கிறார்கள். சுற்றிலும் தளகர்த்தர் சபையோர் சூழ்ந்திருக்கிறார்கள். வசந்தசேனையின் பின்புறமாக தாதியர் சாமரம் முதலிய தாங்கி

நிற்கின்றனர்.

-அதிகமாய்க் கூறுவதிற் பயனென்ன? காலகேய நிவா தகவசர் அத்தனை பேரையும் பற்குனன் ஒருவனாய் நின்று வென்றதுபோல, முத்துவிஜயனது சேனா சமுத் திரம் முற்றையும் நமது மனோஹரர் ஒருவ ர வென்றா ரெனக் கூற வேண்டும்! அவரது தாளாண்மையும் தோளாண்மையையும் புயவலிமையையும் சி ைல

வலிமையையும்பற்றி நான் புகழத் தக்கவனல்லன்:

அவரது செய்கைகளே அவற்றைப் பிரசித்தப்படுத்து கின்றன. வாள் யுத்தத்தில் தனக்கு ஒப்புயர்வில்லை யென மதித்திருந்த முத்துவிஜயனுடன், பக்க உதவி வேண்டாமெனத் தடுத்து, அந்த வாள் யுத்தமே புரிந்து அவன் மாளும்படி.ெ ய்த சுத்தவீரனை, பதினாறு வய துடை அறியாப் பாலனென யாவர் உரைப்பாரினி!அரசே நமது பகைவரையெல்லாம் உலர்ந்த சருகிற்கு அச்கினியென அழியும் படி செய்து, நமது தேசத்திற்கு ஜன்ம விரோதியாகிய பாண்டியனது சி ரத் ைத க் கொய்து, மீனக்கொடியைத் தாழ்த்தி, வெம்புலிக் கொடியையுயர்த்தி, சோழ நாட்டின் மகிமை உலகெல் லாம் விளங்கும்படி .ெ ச ய் த வீர கண்டையணிந்த தாள்னை, வெற்றி மாலை புனைந்த வீரனை, ஜெய லட்சுமி துலங்கும் தோளனை, பகைவர் பணியுஞ் சூரனை, எவர்க்குமஞ்ச்ாத் தீரனை, தாம் மைந்தனாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/52&oldid=613365" இலிருந்து மீள்விக்கப்பட்டது