பக்கம்:மனோகரா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) மனோஹரன் 47

கிறாயா நீ? இந்த நியாயம் உனக்கு யார் கூறியது? இது வரையிலிப்படி நடந்ததில்லையே! அடே நானுனக்குக் குருவாயிருந்து இந்த அநியாயம் நடந்தால் உலகத்தார் என்னையன்றோ துாற்றுவார்கள்? வசந்தசேனையை நீ விவாகம் செய்துகொள்ளலாகாதென முன்பே நியாய மெடுத்துக் கூறியிருக்கிறேன். அதுவுமன்றி பட்டத்து ராணி பத்மாவதியிருக்கும்பொழுது வேறொரு ஸ்திரீயை அவளுடைய இடத்தில் நீ எப்படி உட்காரவைத்துக் கொள்ளலாம்? இது என்ன அநீதி! இதுவோ உன் னுடைய செங்கோன் முறைமை?-என்ன சும்மா இருக் கிறாய்?-சத்தியசீலா! நீ மந்திரியாக இங்கிருந்து இவ் விஷயங்களையெல்லாம் நீ எப்படிப்பார்த்துக்கொண் டிருக்கிறாய்? உனக்கும் எங்கே போயது புத்தி:

சுவாமி! என்மீது தாம் முனியலாகாது; இதுவரையில் இம்மாதிரியாக நடந்ததில்லை. இன்றைத்தினம் தம் முடன் வந்த பிறகே இப் புதுமையைக் கண்டேன்! தாம் அவசரப்படலாகாது.-மஹாராஜா. நான் தங்களுடைய ஊழியனாகிய மந்திரி; ஆயினும் மந்திரியினுடைய முதற் கடன் மஹாராஜா ஏதாவது தவறி நடந்தால், தனது சிரசு போவதாயிருந்தபோதிலும், அ ையெடுத்துக் காட்டவேண்டியதே ஆகையால் என்னுடைய கடனை நான் தீர்க்கவேண்டும். பொறுத்தருள வேண்டும்.-- மஹாராஜா, தம்முடைய குலகுரு கூறிய வண்ணம் தாம் வசந்தசேனையைச் சிம்மாசனத்தில் உட்கார வைத்துக் கொள்வது நியாயமன்று இது தமது செங்கோன் முறைமைக்கழகன்று. தர்ம சாஸ்திரங்களுக்கெல்லாம் விரோதமாகும். ராஜ தர்மமன்று. கூத்திரியர்கள் ஒரு தாரத்திற்குமேல் பல தாரம் கொள்ளலாம், அன்றியும் இச்சித்துப் பலஸ்திரீகளை வைப்பாக வைத்துக்கொள்ள லாம். ஆயினும் சிம்மாசனத்தில் உட்காரும் பெருமை முதல் மனைவியாகிய பட்டத்து ராணி ஒருத்திக்கே உரியது. ஆகையால் மஹாராஜா, இப்பொழுதும் ஒ ன் று ம் கெட்டுப்போகவில்லை. இப்பொழுதாவது வசந்தசேனையை அந்தப்புரத்திற்கு அனுப்பி விடும் -

(வெளியில் ஜெய பேரிகை முழங்குகிறது ) மனோஹரர் வந்துவிட்டார்!-அரசே! அவர் இக்கோ லத்தைக் காண்பது நியாயமன்று புருஷர்களுள் உத்தம ராகிய தமக்கு நான் கூறத் தக்கது. இனி என்ன இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/56&oldid=613378" இலிருந்து மீள்விக்கப்பட்டது