பக்கம்:மனோகரா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-21 மனோஹரன் §§

to f

கண்ணே! மனோஹரா! எங்கே இதுவரையில் உன்ளை அரண்மனையிற் காணோம, நான் எங்கும் சற்றிப் பார்த்தேனே?

நானும் உம்மைத் தேடி அரண்மனையெங்கும் சற்று முன் பாகச் சுற்றி வந்தேன்.

நீ ஒருவேளை வெற்றி வசந்தம் கொண்டாடுமிடத்தில் இருப்பாயென்று இப்பூந்தோட்டத்திற்கு வந்து சுற்றிபி பார்த்தேன், சற்று முன்னே என் கண்ணிற் பட வில்லையே?

நானும் அவ்வாறே நினைத்து உம்மைத் தேடி வந்தேணிக

வரையில்.

என்ன சமாசாாம்? ஏதாவது முக்கியமுண்டோ?-என்ன நீ சற்று முன்பாக அமுதுகொண்டிருந்தாற்போலிருக்கி

றதே?

அம்மா, என்னை மன்னிக்கவேண்டும். நானும் உங்களை அதே கேள்வி கேட்க வாயைத் திறந்தேன்-அம்மணி, என்ன சமாசாரம் ?

மனோஹரா, ஏன் என்னிடம் ஒளிக்க முயலுகிறாய்? இன்றைத்தினம் காலை கொலு மண்டபத்தில் நடந்த விஷயமெல்லாம் தெரியும் எனக்கு.

யார் சொன்னது ?

யார் சொன்னாலுமென்ன?-சத்தியசீலர் சொன்னார்கண்ணே, அது என் தலைவிதி, அதற்காக நீ வருத்தப் படுவrனேன் ?

அம்மணி, நான் எவ்வாறு பொறுப்பேனிதை' உமக்கு பணிப் பெண்ணாயிருந்த அந்த வசந்தசேனை, மஹா ராஜாவின் அருகில், நான் தமக்காகக்கொணர்ந்த சிங்கா தனத்தில், நீர் உட்கார்ந்திருக்கவேண்டிய இடத்தில் உட் கார்ந்திருப்பதைக் க ண் டு ம், நான் பொறுத்திருக்க வேண்டியதாயிற்றே! அம்மணி வீணில் என் கையைக் கட்டி விட்டீரே! எளக்கு நேரிட்ட இந்த அவமானத்தைக் குறித்து நான் வருந்தவில்லை, தமக்கு இதனால் நேரிடும் மானக் கேட்டை நான் எவ்வாறு பொறுப்பேன்; வெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/62&oldid=613395" இலிருந்து மீள்விக்கப்பட்டது