பக்கம்:மனோன்மணீயம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம் : இரண்டாம் களம் 107 அருகே நின்றனன். அப்போ, தறைவர்: "மருகா! நேற்று மந்திரி மனைவி on 1 155. பலபல பேச்சுப் பகருங் காலை பலதே வன்றன் ஜாதக பலத்தில் அரச யோகம் உண்டென்ற றைந்தது விரைவில் வருமோ என்று வினவினள்; வரும்வரும் விரைவில் என்றேன் யானும்: 160. மறுமொழி கூறாது இருந்து பின் மனோன்மணி வதுவைக் காரியம் பேசினள். மற்று.அது நடக்குமோ? என்றவள் கேட்டு நகைத்தாள். நடப்ப தரிதென நான்மொழிந் ததற்கு வருத்தமுற்ற வள்போல் தோற்றினும், கருத்திற் 165. சிரித்தனள் என்பது முகத்தில் தெரிந்தேன்" எனப்பல இரகசியம் இயம்பி. 'வலியோர் மனக்குறி, முகக்குறி, வறிதாம் சொற்கள் இவைபோல் வருபவை யெவைதாம் காட்டும்?" என உரைத் திருவரு மெழுந்து பின் நகைத்தார். 170. பினையென் மைத்துனன் பேசி மீண் டுடனே எனக்கிங் கிவையெலாம் இயம்பினன் உனக்குச் சாக்கி வேண்டுமேற் காக்கைச் சுப்பனும் உண்டு; மற் றவனைக் கண்டுநீ 2-வது 2–9 s வேண்டாம்! வேண்டாம் ஐயமற் றதற்கு. 175. மீண்டும் ஒரு மொழிகேள் இவ்வழியாய்த் துரதுவர் போகும் காலைத் தாக -- ஏதுவால், இரும்படி இராமன் என்றன் தங்கை மனைக்கு வந்தவத் தருணம் அங்கியான் இருந்தேன். “அரண்மனைச் செய்தி 180. என்ன?’ என்றேற்கவன் இயம்பும் "மன்னன் தெத்தெடுத் திடும்படி யத்தன முண் டென, *எப்போது யாரை?' என்றேற்கு ஒன்றுஞ் செப்பா தெழுந்து சிரித்தனன் அகன்றான். முதல் உழ : பலதே வற்கிவன் நலமிகு சேவகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/109&oldid=856085" இலிருந்து மீள்விக்கப்பட்டது