பக்கம்:மனோன்மணீயம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மனோன்மணியம் நோவும் சாவும் ஒன்றே. அன்றியும் உலகெலாம் நோக்கில் நம் உடலொரு பொருளோ? பஞ்சா சத்கோடி யெனப்பலர் போற்ற எஞ்சா திருந்த இப்புவி அனைத்தும் 30. இரவியின் மண்டலத் தொருசிறு திவலை பரவிய வானிடை விரவிய மீனினம் இரவியில் எத்தனை பெரியது.ஒவ் வொன்றும்! இரவியும் இம்மீன் இனங்களும் கூடில் ஒரு பிர மாண்டமென் றுரைப்பர். இதுபோல் 35. ஆயிரத் தெட்டுமற் றுண்டென அறைவர். ஆயிரத் தெட்டெனல் அலகிலை என்பதே. இப்பெரும் உலகெலாம் ஒப்பறு திருமால் உந்தி’யந் தடாகத் துதித்தபன் முளரியில் வந்ததோர் நறுமலர் தந்தபல் லிதழில் 40. ஒரிதழ் அதனில் ஒர்சார் உதித்த நான்முகச் சிலந்தி நாற்றிய சிறுவலை ஏன் மிக? நாமிங் கோதிய மாலும் ஒருபெருங் கடலில் உறுதுரும் பென்ப அப்பெருங் கடலும் மெய்ப்பொருட் கெதிரில் 45. எப்படிப் பார்க்கினும் மிசையாப் பேய்த்தேர். இங்கிவை உண்மையேல், எங்குநாம் உள்ளோம்: நீர் யார்? நான் யார்; ஊரெது? பேரெது? போரெனப் பொறுக்கலிர் ! ஒ!ஓ! பாரும்! மறுவறு மாயா மகோததி யதனிற் 50. புற்புதம் அனைய பற்பல அண்டம் வெடித்தடங் கிடுமிங் கடிக்கடி, அதனைத் தடுப்பவர் யாவர்? தாங்குநர் யாவர்? விடுத்திடும், விடுத்திடும் வீனிவ் விசனம். இந்திர ஜாலமிவ் எந்திர விசேடம் 55. தன் தொழில் சலிப்பற இயற்றும். மற் றதனுன் படுபவர் திரிகை"யுட் படுசிறு பயறே. விடுபவர் யாவர் பின்! விம்மி விம்மிறீர் அழுதீர், தொழுதிர், ஆடினரீர், பாடினிர், யாரென் செய்வர் ! யாரென் செயலாம்! 60. அடித்திடில் உம்மையும் பிடிக்குமிம் மாயை -- 1."ஐம்பது கோடி 2.கொட்பூழ் 3-இ.தாங்கவிட்டி 4, கானல் நீர் க. பெருங்கட்ல் 6. நீர்க்குமிழிT7. திரிக்கும் இயந்திரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/126&oldid=856123" இலிருந்து மீள்விக்கப்பட்டது