பக்கம்:மனோன்மணீயம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மனோன்மணியம் முற்றும் இயல்பே. மற்றுத்தன் குகையுள் உற்றரி முகமயிர் பற்றிடின் அதற்கக் குறும்பால் எழுஞ்சினம் இறும்பூ தன்றே! உரிமைமேல் ஆண்மைபா ராட்டார் சாந்தம் 135. பெருமையில் பிணத்திற் பிறந்ததோர் சிதம் அந்தணர் வளர்க்கும் செந்தழல்” தன்னிலும் நாட்டாபி மானமுள் மூட்டிய சினத்தி அன்றோ வானோர்க் கென்றுமே உவப்பு! வந்த இக் கயவர்.தும் சிந்தையிற் கொளுத்திய 140. வெந்தழற் கவரே இந்தனம்’ ஆகுக! படைகள் : ஆகுக! ஆகுக! ஜீவ இன்றுநீர் சிந்தும் இரத்தழோர் துளியும் - நின்றுகம் பலவும் நிகழ்த்துமே இந்தப் பண்டியர் உரிமை பா ராட்டும் பண்பினர்: தீண் டன் மின் திருந்தவீர்!. அவர்தம் செருக்கு, 145. சுதந்தரம் அவர்க்குயிர்; சுவாசமற் றன்று நினையுமின் நன்றாய்க் கனவினும் இதனை"... என முர சறையுமே எத்திசை யார்க்கும் இத்தனிப் போரில் நீர் ஏற்றிடும் காயம் சித்தங் களித்து, ஜயமா துமக்கு 150 முத்தமிட் டளித்த முத்திரை ஆகி எத்தனை தலைமுறைக் கிலக்காய் நிற்கும்! படைகள் : ஜே! ஜே! ஜீவ : போர்க்குறிக் காயமே புகழின்_காயம் யார்க்கது வாய்க்கும்; ஆ1ஆ! நோக்குமின்! அனந்தம் தலைமுறை வருந்தனி மாக்கள், 155. தினந்தினம் தாமனு பவிக்குஞ் சுதந்தரம் தந்ததம் முன்னோர் நொந்தபுண் எண்ணிச் சிந்தையன் புருகிச் சிந்துவர் கண்ணிர், என்றால் அப்புண் இரந்துகோட்டக்கது." அன்றோ? அறைவீர். ஐயோ! அதுவும் 160. புண்ணோ? புகழின் கண்ணே. எவரே புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்? புகழுடம் பன்றியில் விகழுடம் போமெய்? 1. சிங்கம் 2. ஒமத்தி 3. விறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/140&oldid=856152" இலிருந்து மீள்விக்கப்பட்டது