பக்கம்:மனோன்மணீயம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : இரண்டாம் களம் 145 காரா வேண்டுமென் றாரே விடுப்பர். சீச்சீ அப்படி யேதான் ஆயினும் நமக்குக் கைப்படு கடமையே கடமை... முருகா! 75. எத்தனை பேரால் ஏலுமிக் காவல்? முதற்படை : நாலிலொன் றாயின் சாலவும் மிகுதி. காரா : அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின் இத்தனை பேர்க்குள தொழிலெலாம் தம்மேல் ஏற்றிட வல்லவரை மாற்றி நீ நிறுத்திக் 80. காட்டுதி எனக்கு. முதற் படை காட்டுவன் ஈதோ! (அணிவகுத்துக் காட்ட) காரா : (தனதுள்) நல்லணித் தலைவன். வல்லவர் இருவரும். முதற் படை : ஈதோ நின்றனர்! (காவற்படைகளை விலக்கி நிறுத்திக் காட்ட) пънтс"п : போதுமோ இவர்கள்? முதற் படை : போதும்! போதும்! காவற்படைகள் : போதுமே யாங்கள். காரா எண்ணுமின் நன்றா யேற்குமுன்! பின்புநீர் 85. பண்ணும் தவறு நம் பாலாய் முடியும், காவற்படை t தவிர்கிலம் கடமையில், சத்தியம், தலைவ! காரா தகுதியன் றெனச் சிலர் சாற்றிய தொக்க மிகு பழி நீவிரும் மொழிவிரோ என்மேல்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/147&oldid=856168" இலிருந்து மீள்விக்கப்பட்டது