பக்கம்:மனோன்மணீயம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மனோன் மணியம் உபதேசிக்கின்றார். வாணியினது காதலனாகிய நடராஜன் மேல் அவள் பிதா ஆரோ பித்திருந்த அபராகங்களால் வெறுப்புக் கொண்டிருந்த பாண்டியன் அக் குருமொழியை உட்கொள்ளாதவனாய்க் குடிலனுடைய துன் மந்திரத்தை விரும்பினன். குடிலனோ தன்ன யமே கருதுவோனாதலால், சேரதேசத்தரசன் மருமகனாக வருங்காலத்தில் தன் சுவதந்தரியத்திற்கு எங்ஙனம் கெடுதி வருமோ என்ற அச்சத்தாலும், ஒருபால் தன் மகனாகிய பலதேவனுக்கே மனோன்மணியும் அவட்குரிய அரசாட்சியும் சித்திக்கலாதா என்ற பேராசையாலும் முனிவர் கூறிய மணத்தைத் தடுப்ப தற்குத் துணிந்து தொடக்கத்திற் பெண் வீட்டார் மனம் பேசிப் போதல் இழிவென்னும் வழக்கத்தைப் பாராட்டிப் புருேடாத்தமன் மனக்கோள் அறிந்தே அதற்கு யத்தனிக்க வேண்டுமென்றும், அப்படியறிதற்குப் பழைய சில விவா தங்களை மேற்கொண்டு ஒரு துாது அனுப்பவேண்டுமென்றும் அப்போது கல்யாணத்திற்குரிய சங்கதிகளையும் விசாரித்து விடலாமென்றும் ஒரு சூது கூற அதனை அரசன் நம்பி, குடிலமகன் பலதேவனையே இவ்விஷயத்திற்குத் துரதனாக அனுப்பினான். சேரதேசத்திலோ புருடோத்தமன் தனக்குச் சில: நாளாக நிகழ்ந்துவரும் கனாக்களில் மனோன்மணியைக் கண்டு காமுற்று அவன் இன்னாளென வெளிப்படாமையால் மனம் புழுங்கி யாருடனேனும் போர் நேர்ந்தால் அவ் வார வாரத்திலாயினும்தன் மனத்தைக் கொள்ளை கொள்ளும் கனாவொழியாதா வென்ற நோக்கமுடனிருக்கும் சந்தியாக இருந்தது. அதனாற் பலதேவன் சென்று தன் பிதா தனக்கு இரகசியமாகக் கற்பித்தனுப்பியபடி சேரன் சபையில் அகெளரவமான துர்வாதம் சொல்லவே புருடோத்தமன் கோபம் கொண்டு போர் பூண்டு பாண்டி நாட்டின் மேற். படையெடுத்துப் புறப்பட்டான். அச்செய்தி அறிந்து ஜீவகன் போருக்கு ஆயத்தமாகவே இருபடையும் திருநெல்வேலின் o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/16&oldid=856195" இலிருந்து மீள்விக்கப்பட்டது