பக்கம்:மனோன்மணீயம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 15. கெதிரிலே கை கலந்தன. அப்படிப் போரி நடக்கும்போது பாண்டியன் சேனையின் ஒரு வியூகத்திற்குத் தலைவனாக இருந்த பலதேவனை அவன் கீழிருந்த ஒரு சேவகன் தன் வேலாலே தாக்க, அதனால் அவன் மூர்ச்சிக்கவும், படை முழுதும்குழம்பவும் சங்கதி ஆயிற்று. அப்படித்தாக்க நேரிட்ட காரணமேதென்றால், பலதேவன் களவுவழிக் காமம் துய்க் கும் துன்மார்க்கணாதலால் அப்படைஞனது சகோதரிய்ைக் கற்பழித்துக் கெடுத்துவிட்டது பற்றி யுண்டான வைரமே என்பது, படைஞன் வேலாற் பலதேவனைத் தாக்கிய பொழுது, கூறிய வன்மொழியாலும் அவன் தங்கைக்கு அரண்மனையினின்றும் பலதேவன் திருடிப் பரிசாக அளித்த ஒரு பொற்றொடி அவன் கையில் ஆக் காலம் இருந்தமையா அலும் வெளிப்படுகின்றது. படை நியதி கடந்த அச்சேவகனை அருகுநின்ற வீரர் அக்கணமே கொன்றுவிட்டார்கள். பேைதவனும் மூர்ச்சை தெளிந்து கொண்டான். ஆயினும் படையிற் பிறந்த குழப்பம் தனியாது பெருகி விட்டதனால், பாண்டியன் சேனை சின்ன பின்னப்பட்டுச் சிதறுண்டு. ஜீவகன் உயிர் தப்புவதும் அரிதாகும்படி தோல்வி நேர்ந்தது. சத்தியவாதியாகிய நாராயன்னன் என்னும் ஒரு சுத்த, வீரர் அக்காலம் வந்து உதவி செய்யாவிடில் அப் போர்க் களத்தில் ஜீவகன் மாண்டேயிருப்பான். இந் நாராயணன் யாரென்றால், நடராஜனுடைய நண்பன். இவன் குடிலனுடைய குதுகள் தெரிந்தவன். அரசன் நிந்தித்துத் தள்ளினும் அவனைக் காப்பாற்றும். பொருட்டு அவனை விட்டு நீங்காது மதுரையினின்றும் அவனோடு தொடர்ந்து வந்த பரோபகாரி. குடிலன் இவன் திறமும் மெய்ம்மையும் அறிந்துள்ளானாதலால், இந். நாராயணன் போர்முகத்திருக்கில் தான் எண்ணியபடி ஜீவக. அயிருக்குக் கேடுவரவொட்டான் எனக் கருதிச் சண்டை. ஆரம்பிக்கும் முன்னமே அவனைக் கோட்டைக் காவலுக் _ாக நியமித்தனுப்பினான். ஆயினும் போர்க்களமே கண் _ணாக இருந்த நாராயணன் சேனையிற் குழப்பம் பிறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/17&oldid=856216" இலிருந்து மீள்விக்கப்பட்டது