பக்கம்:மனோன்மணீயம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

孪6 மனோன்மணியம் கண்டு சில குதிரைப் படைகளைத் திரட்டிக் கொண்டு திடீரென்று பாய்ந்து சென்று அரசனையும் எஞ்சிகை சேவகரையும் காப்பாற்றிக் கோட்டைக்குட் கொண்டு வந்து விடுத்தான். சுத்த வீரனாகிய அரசன் இங்ங்ணம் தான் பகைவருக்கு முதுகிட்ட இழிவை நினைந்து நினைந்து து க மும் துாண்டவே தற்கொலை புரிய யத் தனிக்கும் எல்லை நாராயணன் மனோன்மணியினது ஆதரவின்மையை அரச னுக்கு நினைப்பூட்டி அக்கொடுந்தொழிலிலிருந்து விலக்கிக் காத்தான். அவனது நயவுரையால் அரசன் ஒருவாறு தெளி வடைந்திருக்கும்போது சேரன் விடுத்த ஒரு தூதுவன் வந்து, ஒரு குடத் தாமிரவர்ணி நீரும் ஒரு வேப்பந்தாரும் போரிலே தோற்றதற்கு அறிகுறியாகக் கொடுத்தால் சமர் நிறுத்துவ தாகவும், அன்றேல் மறுநாட் காலையிற் கோட்டை முதலிய யாவும் வெற்றிடமாம்படி தும்பை சூடிப் போர் முடிப்பதாக வும் கூறினான். போரில் ஒருமுறை தான் புறங்கொடுத்த புகழ்க்கெடுதியை உயிர் விடுத்தேனும் நீக்கத் துணிவு கொண்ட ஜீவகன் அதற்குடன் படாமல் மறுத் துவிட்டு, பின்னும் சமருக்கே யத்தனித்துத் தன் அரண்களைச் சோதித்து, நோக்குங்கால் அவை ஒருநாள் முற்றுகைக்கேனும் தகுதி பற்று அழிந்திருப்பதைக் கண்ணுற்று, அவ்வளவாகத் தன் படை முற்றும் தோற்க நேரிட்ட காரணம் வினவலாயி னான். தன் கருத்திற்கெதிராக அரசனைக் காப்பாற்றிய வரும் நாராயணன் மேற் தனக்குள்ள பழம்பகை முடிக்க இதுவே தருணம் எனக் கண்டு அரண் காவலுக்கு நியமிக்கப் பட்ட நாராயணன் காவல் விடுவித்துக் கடமை மீறி யுத்த களம் வந்ததே காரணமாகக் காட்டிக் கோபமூட்டிப் படையிற் பிறந்த குழப்பத்திற்கு ஏதுவாகப் பலதேவனை ஒரு சேவகன் வேலாற்றாக்கினதும் தெரிவித்து, அதுவும் வியூகத் தலைவனாக ஆக்கப் பெறாத பொறாமையால் நாராயணன் ஏவிவிட்ட காரியமே எனவும் அத்தொழிலுக்குப் பரிசாக அவன் அரண்மனையினின்றும் திருடிக் சொடுத்ததே அவன் கையிலிருந்த அரண்மனை முத்திரை பொறித்த பொற் றொடி எனவும் குடிலன் ஒரு பொய்க்கதை கட்டி அதன்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/18&oldid=856237" இலிருந்து மீள்விக்கப்பட்டது