பக்கம்:மனோன்மணீயம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 17 அவன் நம்பும்படி செய்தான். அவ்வாறே களவு கொலை, அஞ்ஞாலங் கனம் முதலிய குற்றங்களை நாராயணன் மேற் சுமத்தி அவற்றிற்காக அவனைக் கழுவேற்றும்படி விதியும் பிறந்தது. இத்தருணத்தில் சுந்தர முனிவர் அத்தியந்த ஆவசிக மான ஒர் ரகசியாலோசனைக்கு அரசனை யழைப்பதாகச் செய்தி வந்தமையால் நாராயணனை அவ்விதிப்படி கழுவேற்றவில்லை. முனிவர் இப்போது வந்த காரணம் என்னவென்றால், ஜீவகன் குடிலன் வசத்தனாய், நெல் வேலிக் கோட்டையே சாசுவதமென இறுமாந்திருந்தமை கண்டு பரிதாபம் கொண்டு, தமக்கென இரந்து வேண்டிக் கொண்ட அறைமுதல், தமாச்சிரமவெளி வரையும், ஆபத்காலோப யோகமாக அதிரகசியமான ஒரு சுருங்கை உழைத்துச் சமைத்துக் கொண்டு, பற்றுக்கோடற்று நின்ற 'வகனையும் அவன்மகளையும் கேடுற்றகோட்டையினின்றும் கமது ஆச்சிரமத்திற்கு அச்சுருங்கை வழியழைத்துச் செல்ல வுண் ணியே சுந்தரர் இத்தருணம் எழுந்தருளினார். கோட்டை யின் நிலையாமையுணர்ந்தும் அதின்மேல் வைத்த அபிமானம் ஒழியாமையால் அஃதுடன் தான் முடியினும் இன்னும் ஒரு முறை போருக்கஞ்சிப் புறங்கொடுத்தல் தகாதென ஜீவகன் துணிந்து மறுக்க, மனோன்மணி, பாண்டியர் குலத்திற்கு ஏக சந்ததியாக இருப்பதனால் மற்றையர் ன்க்கேடுறினும் அவளையேனும் காப்பாற்றுதல் தம் கடமையென ஒரு தலையா, உறுத்து முனிவர் கூறமன்னவன் அங்ங்னம் இயைந்து நடுநிசியில் முனிவரோடு தன் மகளை ஆச்சிரமம் அனுப்புவ தாக ஒப்புக் கொண்டான். முனிவரும் சம்மதித்து அகன் மார்; உடனே நிசாமும் தோன்றிற்று. தன் அருமை மகளைப் பிரியும் வருத்தம் ஒருபுறமும், பிரியாதிருக்கில் அவட்குண் ப_ாகும் கெடுதியைக் குறித்த அச்சம் மற்றொரு புறமாக, ஜீவகன் சித்தத்தைப் பிடித்தலைக்கக் கலக்கமுற்று, குரு மொழியிலும் ஐயம் பிறந்து,குடிலனை வரவழைத்து முனிவர் அதிரகசியமாகக் கூறிய சுருங்கை முதல் சகல சங்கதியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/19&oldid=856257" இலிருந்து மீள்விக்கப்பட்டது