பக்கம்:மனோன்மணீயம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் நான்காம் களம் 169 இத்தனை சூதெலாம் எங்கு வைத் திருந்தாய்? உத்தமன் போல மற் றெத்தனை நடித்துளாய். சோரா! துட்டா! சுவாமித் துரோகி ! வாராய் அமைச்ச! வாரீர் படைகாள்! (முருகன் முதலிய தலைவரும் படைஞரும் வர) 120. நாராயணனிந் நன்றிகொல் பாதகன், இன்றியாம் இவனுக் கிட்டகட் டளையும் நன்றியும் மறந்து நன் னகர் வாயிற் காவல் கைவிடுத்துக் கடமையிற் பிறழ்ந்தும், மேவருந்து தொடியிதெங் கோவிலில் திருடியும், 125. ஏவலர்க் கதனையிந் தேபல தேவன் ஒவலில் உயிரினை உண்டிடத் துாண்டி யும், அநுமதி இன்றியின் றமர்க்களத் தெய்திக் கனைகழற் படைபரி கரிரதம் கலைத்துச் சுலபமா யிருந்த நம் வெற்றியும் தொலைத்துப் 30. பலவழி இராசத் துரோகமே பண்ணியும் நின்றுளான். அதனால் நீதியா பவனை இன்றே கொடுங்கழு வேற்றிட விதித்தோம்! அறிமின் யாவரும்; அறிமின்! அறிமின் ! சிறிதன் றெமக்கிச் செயலால் துயரம். 135. இன்றுநேற் றன்றெனக் கிவனுடன் நட்பு. காரா : வெருவிலேன் சிறிதும் வேந்த நின் விதிக்கே! அறியாய் ஆயின் இதுகா றாயும் வறிதே மொழிகுதல்: வாழ்க நின்குலம்! வே ! L 漫 நற்பல மக்களே யாயினென்? நடுநிலை 140. அற்பமும் அகலோம், ஆதலில் இவனை (படைத்தலைவரை நோக்கி) நொடியினிற் கொடுபோ யிடுமின் கழுவில்! முருகன் : / அடியேம். நொடியினில் ஆற்றுதும் ஆஞ்ஞை. குடிலரே வாரும்! ஜீவ : மடையன் இவன் யார்? 1. பொருந்துதற்குரிய . 2. நீங்குதல் இயலாத.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/171&oldid=856220" இலிருந்து மீள்விக்கப்பட்டது