பக்கம்:மனோன்மணீயம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் ! ஐந்தாம் களம் 191 செய்த தெற்கெலாம் உய்வகை ஆனதே! எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம் அத்தனை கொடுத்தும் அறிவிலாப படைஞர், நனறியில் நாய்கள் இன்றஃ தொன்றும் 380. உன்னா தென்னையே ஒட்டிடத் துணிந்தனர், என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்? எளியனென் றெண்ணினேன், வழிபல தடுத்தான், கெடுபயல் பாக்கியம், கடிமணம் இங்ங்னம் நடுவழி வந்ததும்! விடுகிலம். 385. கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே. (5) நான்காம் அங்கம் : ஐந்தாம் களம் முற்றிற்று கலித்துறை அரிதா நினைத்ததன் அங்கங்கள் யாவும் அழிந்த பின்னும் புரியே பொருளெனப் போற்றிய ஜீவ கன் புத்தியென்னே! பிரியாத சார்பு பெயர்ந்து விராகம் பிறந்திடினும் தெரியாது தன்னிலை ஆணவம் செய்யும் திறஞ்சிறிதே! நான்காம் அங்கம் முற்றிற்று ஆசிரியப்பா 12-க்கு அடி 1297 வஞ்சிப்பா 1.க்கு 14 கலித்தாழிசை 3.க்கு 12 கலித்துறை 1-க்கு 4

    • 1327

ஆக அங்கம் 1க்கு : பா. 17க்கு - 1. பலதேவன் 2. நாராயணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/193&oldid=856267" இலிருந்து மீள்விக்கப்பட்டது