பக்கம்:மனோன்மணீயம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ዓ፦፡ ஐக்தாம் அங்கம் முதற் களம் இடம்': கோட்டைக்கும் வஞ்சியர் காலம் : யாமம் பாசறைக்கும் நடுவிலுள்ள வெளி (கு டிலன் தனியே நடக்க) (நேரிசை ஆசிரியப்பா) குடில : (தனிமொழி) o திருமணம் கெடினும் தீங்கிலை ஈங்கினி இருசரம்' இன்றி எப்போ ரிடையும் ஏகார் மதியோர் அதில் வர கேடென்? ஆகா வழியும் அன்றிது சேரனை 5. அணைந்தவன் மனக்கோள் உணர்ந்ததன் பின்னர் சுருங்கையின் தன்மை சொல்லுதும் ஒருங்கே. இசைவனேற் காட்டுதும் இன்றேல் மீள்குதும் பசையிலா மனத்தன்! பணிதலே விரும்புவன் 1 பாண்டிநா டாளவோ படையெடுத் தானி வன். 10. துாண்டிடு சினத்தன்! தொழுதிடில் மீள்வன்.' வேண்டிய நீரும் விழைந்ததோர் தாரும் பாண்டில்” பாண்டிலா யாண்டுகள் தோறும் அனுப்புதும். குறைவென் அதனில்? இதுவே மனக்குறை நீக்கு மார்க்கம்-வ துவை 15. போயினென்? ஆயினென்? பேயன் நம்மகன் எடுத்தெறிந் திடுவனிப் போதே நம்மொழி அடுத்த நம் படைளு ரோ பகைவர்; அவர்ந மைக் கெடுத்தநா ரணற்கே கேளொடு கிளைஞர். ஆதலின இஃ தே தேறு முறுதி...... 20. என ன நம் ஊகம்! என னை நம் ஊக்கம்! முன்னர்யாம் அறியா இன்ன நற் சுருங்கையில் 1. இருவழி, ஈரம்பு 2. வண்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/194&oldid=856269" இலிருந்து மீள்விக்கப்பட்டது