பக்கம்:மனோன்மணீயம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் அங்கம் : முதற் களம் 197 எண்ணி எண்ணி எரிகிற தென்னுளம். 100. எண்ணுதி கருணை ! இவர்க்குள் தாய்க்கொரு புதல்வராய் வந்த பொருநரெத் தனையோ? வதுவை முற்றுறா வயவ: ரெத் தனையோ? புதுமணம் புரிந்த புருடரெத் தனையோ? நொந்த சூலினர் நோவுபா ராது 105. வந்திவண் அடைந்த மள்ள ரெத் தனையோ? செயிருற* முழந்தாள் சேர்ந்தழு பாலரைத் துயிலிடைத் துறந்த சூரரெத் தனையோ? ԿCԱ5 110. சரி, சரி! இவை யுன் அரசர்க் காங்கு சாற்றா தொழிந்த தென்? குடில : சாற்றிலென்? போற்றான் யார் சொலும் புந்தியும் சற்றும். அன்பிலன்; பிறர்படும் துன்பம் சிறிதும் அறியா வெறியன்; அன்போ டிம்மாலை 115. குறியா நீவிடு துரதையும் கொண்டிலன். அண்டிய சீவ ராசிகள் அனைத்தையும் மண்டமர் இதில் நின் வை வாள் தனக்கே இரையிடல் ஒன்றே விரதமாகக் கொண்டனன். பித்தன் ஒருவன் தன்னால் இத் தமிழ் 120. நாடெலாம் வெறுஞ்சுடு காடாய் விடுமே. ஆவ! இப்பெரும் பாவமும் பழியும் அஞ்சினேன்: அஞ்சினேன்; எஞ்சலில் கருணை யுருவே! அடியேற் கொருமொழி தருவையேல் H ஒருவர்க் கேனு முறுதுய ரின்றி 125. அரசனும் புரிசையும் அரைநொடிப் போதிலுன் கரதல9 மாமொரு கெளசலம்,? காட்டுகே னடியேன் கேட்டரு ளரசே! (l) (நிலைமண்டில ஆசிரியப்பா) புரு : பாதகா! விசுவாச காதகா ! (தனதுள்) ஆ ஐா! (சிரித்து: === as o 1.போர் வீரர் _2. வீரர் - 3. வருந்திய கருவுடைய மதளிர் * துன் பமுற்று 5. நெருங்கியபோர் 6. கையிடம் 7. சாமர்த்தியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/199&oldid=856279" இலிருந்து மீள்விக்கப்பட்டது