பக்கம்:மனோன்மணீயம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of C. C. ஐங்தாம் அங்கம் இரண்டாம் களம் இடம் கன்னிமாடத் தொருசார் காலம் : யாமம். (சில் தோழிப் பெண்களும் ஒரு கிழவியும் அளவளாவி இருக்க) (நிலைமண்டில ஆசிரியப்பா) எதுக்குமிவ் விளக்கும் இச்சிறு செம்பும் ஒதுக்கிவை அம்மா! உதவும் வழியில் முதல் தோழி : என்னடி கிழவி! சொன்னால் அறிகிலை. போம்வழி அறியோம்! போமிடம் அறியோம்! 5. மந்திரக் குளிகையோ! அந்தர மார்க்கமோ! மூட்டையேன்? முடிச்சேன் கேட்டியோ தோழி? காது மில்லை!.கண்ணு மில்லை! ஏது மில்லை! ஏனுயிர் இருப்பதோ! கிழவி : கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு 11 10. படும்போ தறிவை! இப் படியே பண்டு முன்னொரு சண்ட்ையில் உன்னைப் பெறுமுன் ஒடினோம்... - முதல் தோழி : போடீ.! உன்கதை அறிவோம். (கிழவி போக: சிரிக்கவா? என்செய! சிவனே! சிவனே! - - (நகை க்க. 2-ம் தோழி : அம்மணி என்செய்தாள்? அக்காள்! அதன்பின், 15. எப்படி அரசன் மீண்டான். செப்பாய் ! 1. இளவயதுடையவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/202&oldid=856288" இலிருந்து மீள்விக்கப்பட்டது