பக்கம்:மனோன்மணீயம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் அங்கம் : இரண்டாம் களம் 201 முதல் தோழி : எப்படிச் செப்பயான் ? ஏந்திழை பட்டபா டய்யோ! அத்துயர் தெய்வமே அறியும்! மன்னவன் வாசல் கடந்தான் எனுமு னம் தன்னிலை தளர்ந்தாள், சாய்ந் தாள். வாணியும் 20. அருகுள செவிலியும் யானு மாய் விரைவில் தாங்கினோம். பாங்குள அமளியிற் சேர்த்தோம். மூச்சிலை; பேச்சிலை முகமெலாம் வெயர்வை இட்டகை இட்டகால் இட்டவப் படியே. இப்படி முடிந்ததே! இனியென் செய்வோம்! 25. தப் புமோ இவ்வொரு தத்துமென் றெண்ணி ஏங்கினோம்,தியங்கினோம்: பாங்கி°ருந் தழுதோம். 2-ஆம் தோழி : ஐயோ தெய்வமே! அப்போ தவளுயிர் பட்டபா டெதுவோ! கட்டம்! கட்டம்! முதல் தோழி : o விதியிது! அலதிது கதையிலும் உளதோ ? 30. நொந்தபுண் அதனிலே வந்திடும் நூறி.டி., தந்தை தேறிடத் தன் துயர் மறைதது மகிழ்ச்சி காட்டினாள், வந்ததித் தளர்ச்சி. மூடிடில் தீயும் மூளுமும் மடங்காய்: 2-ஆம் தோழி : எத்தனை வேதனை! எத்தனை சோதனை! 35. யாது மறியாட் கேதித் துணி பு? ஒதிய கட்டுரை ஒருமுறை இனியும் நவிலுதி அக்காள்? முதல் தோழி : நங்கைநன் மொழியென் செவியிடை இனியும் மணிபோல் திகழும்! அரசனை அடிபணிந் தொரு சார் ஒதுங்கி 40. நீக்கமில் அன்பும் ஊக்கமும் களிப்பும் காட்டிய மதிமுகம் கோட்டியே நின்ற தோற்றமென் கண்ணின் மாற்றுதல் அரிதே! ** என்னோ இதற்கும் யோசனை எந்தாய் ! 1. பக்கம் 2. துணிச்சல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/203&oldid=856290" இலிருந்து மீள்விக்கப்பட்டது