பக்கம்:மனோன்மணீயம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் அங்கம் : மூன்றாம் களம் 215 (கொச்சகக் கலிப்பா) வாணி (பாட) நீர்நிலையின் முதலையின் வாய் நிலைகுலைந்த ஒரு கரிமுன் ஒர்முறையுன் பெயர்விளிக்க உதவினை வந் தெனவுரைப்பரி; ஆர்துயர் அளக்கர் விழும் அறிவிலியான் அழைப்பதற்குன் பேர் தெரியேன் ஆயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ! (1) பாரரசர் துகிலுரியப் பரிதவிக்கும் ஒருதெரிவை? சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள் என உரைப்பர்; ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலியான் அழைப்பதற்குன் ஊர் தெரியேன் ஆயிடினும் உறுதிதரல் உனக்குரித்தே. (2) மறலிவர மணம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக் குறிதழுவி அழிவில்வரம் கொண்டான் முன் என உரைப்பர்: வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன் நெறியறியேன் ஆயிடினும் நேர்நிற்றல் நின தருளே. (3) (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) சுந்தர எதுவோ இதனினும் ஏற்புடைப் பிரார்த்தனை? மந்திரம் தந்திரம் வழங்கும் நற்செபம் . யாவையும் இதுவே பாவாய்! மனோன்மணி ! 180. வருதி இப்புறம், வாங்குதி மாலை. (மனோன்மணி மணமாலை கொண்டு பலதேவ னெதிர் வர) ஒருதனி முதல்வன் உணர்வன் உன்னுளம். உன்னன் புண்மையேல் இன்னமும் காப்பன். |புருடோத்தமன் திரைவிட்டு வெளி வந்து நிற்க) முதற் படை : ஆற்றேன்! ஆற்றேன்: ஐய! இத் தோற்றம். 3-ஆம் படி. : விற்றிருந் தொழுகி உள்வறந் தது.கண். 4-ஆம் படை : அமையா நோக்கமும் இமையா நாட்டமும்: 1. துன்பக் கடல் 2. திரெளபதி 3. கலக்கமிக்கு 4. பார்வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/217&oldid=856320" இலிருந்து மீள்விக்கப்பட்டது