பக்கம்:மனோன்மணீயம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மனோன் மணியம் அவனைத் தேற்றுவதே தற்கால நிலைக்கேற்ற தனது கடமைப்பாடனெத் தெளிந்து அங்ங்னம் ஒப்புக் கொண்டது மன்றி, தன் பாடு எங்ங்னம் ஆயினும் தன்னைச் சார்ந்தவர் சுகத்தைப் பாராட்டும் பெருங்குணத்தால் காதல் கொண் டிருக்கும் வாணி தன் கருத்திற்கிசைய நடராஜனை மணஞ் செய்து கொள்ளவும், நெடுங்காலமாகத் தன் குடும்ப ஊழியம் தலைக்கொண்டு நின்ற நாராயணன் செய்த தவறு யாதேயாயினும் அதனைப் பொறுத்து அவனைச் சிறைவிட வும் தன் பிதாவி னிடம் விரும்பிக் கேட்டுக் கொண்டனள். அப்படியே p வகன் அனுமதி கொடுத்து அகமகிழ்ந்து மணவினைக்கு ஆயத்தம் செய்யவே, நடுநிசி சமீபிக்க முனி வரும் நடராஜனும் வந்து சேர்ந்தார்கள். தாம் போய் மீளுவதற்குள்ளாகக் குடிலன் செய்த துராலோசனையும், அதற்குடன்பட்ட மன்னவனுடைய ஏழ்மையும், கருணா விலாசம் இருந்தமையும் கண்டு வியந்து, அரசன் நிச்ச யித்த வண்ணமே நடத்த சுந்தரர் இசைந்தார். கற்படைக் கருகில் உள்ள மணவறையை விவாக முகூர்த்தத்திற் கிசைந்தவாறு அலங்கரித்து, அதில் குடிலன் ஒழிய மற்ற மந்திரப் பிரதானிகளுடன் முனிவர் ஜீவகன் நடராஜன் பலதேவன் நாராயணன் முதலிய அனைவரும் கூடிக் குடிலன் வரவிற்குச் சற்று எதிர்பார்த்திருந்தும் வரக் காணாமையால் மணவினைச் சடங்குகள் தொடங்கி, பலதேவனுக்கு மாலைசூட்ட ம்னோன்மணியை வரவழைக் கும் எல்லை, குடிலன் வழிகாட்ட, கற்படைவழி வந்த புருடோத்தமனும் முனிவ ரறையில் வந்து சேர்ந்து அடுத்த அறையாகிய மன வறையில் நடக் கும் ஆகோஷம் என்ன வென்று நோக்கவே, தன் திரைவிட்டு வெளிவந்து பலதேவ ணெதிரே மனமாலையும் கையுமாய்ச் சி த் தி ர ப் பிரதிமைபோல உணர்வற்றுச் செயலற்று நின்ற தன் காதலியாகிய மனோன்மணியைக் க ண் ணி ர எண் டு ம் களிக்கக் காணலும், ப ள் ள த் து ட் ப ா யு ம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/22&oldid=856326" இலிருந்து மீள்விக்கப்பட்டது