பக்கம்:மனோன்மணீயம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 2}^ பெருவெள்ளம் போல் அவாப் பெருகி யீர்த்தெழ, திடீ ரென்று கடிதிற் குதித்து யாரும் அறியாது சபையுட் புகுந்து கையற்ற சோகத்தால் மனமிறந்து நின்ற மனோன்மணி தன் கண் முன் சென்று நின்றனன். தன்னுள்ளத்திருந்த தலை வன் இங்ங்ணம் பிரத்தியகூடிப்படலும் அக்கணமே ஆனந்தப் பரவசப்பட்டு மனோன்மணி தன் கைக்கொண்ட மண மாலையை அவன் கழுத்தோடு சேர்த்துத் தற்போதமிழந்து அவன் தோண்மேல் வீழ்ந்து மூர்ச்சையாயினள். இங்ங்ணம் அயலான் ஒருவன் சபையுட் புகுந்ததும், மனோன்மணி அவனுக்கு மாலைசூட்டி மூர்ச்சித்ததும் கண்டு ஜீவக ணாதியர் திடுக்கிட்டுச் சூதெனக் கருதிப் பொருதற் கெழுங் கால், சுந்தர முனிவர் கையமைத்துச் சமாதானம் பிறப் பிக்கப் புருடோத்தமன், குடிலன் தன்னிடத்தில் வந்துகூறிய துரோகச் சிந்தனையும் தான் அதற்கிசையாது அவனையே கால்யாய்ப்பிட்டு ஜீவகனுடன் ஒப்புவிக்கக் கொணர்ந்த மையும் கூறித் தனக்குயிர்நிலையா நின்ற மனோன்மணி யுடன் தன் பாசறைக்கு மீள யத்தனிக்குமளவில், சுந்தர முனிவர் ஆஞ்ஞையால் ஜீவகன் மனந்தெளிந்து மகளையும் மருமகனையும் வாழ்த்த அதுகண்ட யாவரும் கண் படைத்த பெரும்பயன் அடைந்து அருட்டிறம் புகழ்ந்து ஆனந்தம் அடைந்தனர். இதுவே இந் நாடகத்துள் வரும் கதையின் சுருக்கம். இக் கதையை வேண்டுழி வேண்டுழி விரித்து ஆங்கிலேய நாடகரீதியாம் ஜீவகனாதியராகிய கதாபுருஷர்களுடைய குணாதிசயங்கள் அவர் அவர் வாய்மொழிகளால் வெளிப் படும்படி செய்திருப்பதுமன்றி, வாழ்த்து வணக்கத்துடன்" தொடங்கி, நாற்பொருள் பயக்கும் நடை"யினைக் கூடிய அளவும் தழுவி, தன்னிகரில்லாத் தலைவனையும்' தலைவியையும் உடைத்தாய், "மலைகடனாடு வளநகர் பருவம் இரு சுடர்த் தோற்றம்' என்றின்னவும் பிறவும் rற்புழிப் புனைந்து, 'நன்மணம் புணர்தலே' முடிவாகக கொண்டு, மந்திரம் தூது செலவிகன் வென்றி” எனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/23&oldid=856346" இலிருந்து மீள்விக்கப்பட்டது