பக்கம்:மனோன்மணீயம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T2 மனோன்மணியம் .சந்தியிற்றொடர்ந்து அங்கம் களம்' என்னும் சாகுபா டுடைத்தாய் நிற்கும் இந்நாடகத்தில் தமிழ்க் காவிய உறுப் புக்கள் பற்பல ஆங்காங்கு வருவித்திருப்பதும் அன்போடு .பார்ப்போம் கண்ணுக்குப் புலப்படலாம். இல்லறம் துறவறம் பத்தி ஞான முதலிய மோக: சாதனங்கள் பொருத்தமுடைய சந்திகளில் வெளிப்படை யாக அமைந்திருப்பதுமல்லாமல் இக் கதையினையே ரூபகமாலாலங்காரமாகக் கருதில், தத்துவ சோதனை செய்யும் முமுகr-களுக்கு அலு கூலமாகப் பலிக்கவும் கூடும். அப்படி உருவக மாலையாகக் கொள்ளுங்கால், ஜீவகனைச் சார்போதனமான ஜீவாத்மா ஆகவும் அவனைத் தன் வசப்படுத்தி யாட்டுவித்த குடிலனை மாயா சக்தியாகவும், மனோன்மணியை ஜீவாத்மாவின் பரிபக்குவ காலத் துதிக்கும் முத்திக்குரிய உத்தம பாகமான சுத்த தத்துவமாகவும், அவள் தோழி வாணியைப் புத்தித்தத்துவ மாகவும், அவள் காதலனாகிய நடராஜனை ஞானதாதக் வான உபாசனா மூர்த்தியாகவும் புருடோத்தமனை அனுக் கிரக சத்தியாகவும், சுந்தர முனிவரைக் கருணாநிதியாகிய ஞானாசாரியராகவும், ஜீவகனுக்குத் தலைநகராகக் கூறிய முத்திபுரம் என்னும் மதுரையை ஜீவாத்மா வுதித் தொடுங்கும் மூலத்தானமாகவும், அவனும் குடிலனும் சேர்ந்து கட்டிய நெல்வேலிக் கோட்டையை மாயாகாரிய மான அன்னமயாதி பஞ்சகோசத்தால மைந்த சரீரமாகவும், அதிலிருந்து மனோன்மணி கண்ட கனாவைச் சுத்தாந்தக் கரண ஜநிதமான பரோகrஞானமாகவும், சேரதேசத்தில் புருடோத்தமன் கண்ட கனாவைப் பரம பசுபதியான தசுவரனது அருளின் நிறைவாகவும், மனோன்மணியும் புருடோத்தமனும் சந்திக்கக் காரணமாக முடிந்த முனிவர் காட்டிய சுருங்கையைப் பிரத்தியrானுபூதிக் கேதுவான -பாச வினோசன பந்தாவாகவும், பிறவும் இம்முறையே :பாவித்து உய்த்துணர்ந்து கொள்ள வேண்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/24&oldid=856370" இலிருந்து மீள்விக்கப்பட்டது