பக்கம்:மனோன்மணீயம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன் மனரீயம் முதல் அங்கம் முதற்களம் இடம் : பாண்டியன் கொலு மண்டபம். காலம் காலை. (சேவகர்கள் கொலு மண்டபம் அலங்கரித்து நிற்க) (நேரிசை ஆசிரியப்பா) முதற் சேவகன் : புகழ்மிகு அமைதரு பொற்சிங் காதனம் திகழ்தர இவ்விடஞ் சேர்மின், சீரிதே. அண்டாம் சேவ : அடியினை யருச்சனைக் காகுங் கடிமலர்! எவ்விடம் வைத்தனை? மூன்றாம் சேவ : ஈதோ! நோக்குதி. கான்காம் சேவ : 8. அவ்விடத் திருப்பதென்? _ம் சேவ : ஆரம். பொறு! பொறு: விழவறா? வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஒசையும், மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் 10. சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்" எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண்மி _ம் சேவ : - முனிவரர் என்றி.டிற் கனிவுறுங் கல்லும்! 3-h Οινοι : -- எத்தனை பத்தி; எத்தனை கூடடம்! எள்விழற் கிடமில்லை. யான்போய்க் கண்டேன்! 1. மணம் மிக்க மலர்கள் 2. விழாக் கோலம் நீங்ஆப் பெறாத. ச. கரும்பைக் கடிக்கும் 4. கத்திரித்து மட்டஞ் செய்யப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/31&oldid=856532" இலிருந்து மீள்விக்கப்பட்டது