பக்கம்:மனோன்மணீயம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினாத்தாள்கள் 351 (அல்லது) o மனோன்மணி பாத்திரம் வாயிலாகப் பெண்மை நலனைப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை உணர்த்தி யுள்ள பான்மையினை விளக்குக. 20 3. இடஞ்சுட்டி விளக்குக : அ. சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை காட்டினுங் கீறிய வரையலாற் காணார். ஆ. உழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதில் நொச்சியும் உளதென நிச்சயம் கூறே. May—1971 (First year) 1. விஞ்ஞான உண்மைகளைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தம் நாடகத்தில் இழைத்துள்ள பாங்கினை எடுத்துக் காட்டிப் பாராட்டுக. --- (அல்லது) சிவகாமி சரிதத்திற்கும் மனோன்மணிய நாடகத் திற்கும் உள்ள இயைபை ஆராய்க. 20 2. 'என்னை யென் மதி யிங்ங்ண மடிக்கடி யென்னையு மெடுத்தெறிந் தேகுதல்” - இதன் உட்கிடக்கையை நன்கு விளக்குக. (அல்லது) மனோன்மணிக்குச் சுந்தரர் மீது இருந்த பற்றும் ஜீவகன் மீது இருந்த பற்றும் புலப்படுமாறு. எங்ங்னம்? 20 3. இடஞ்சுட்டி அகலவுரை தருக ! - அ ஒதி யுணரினும் மாத ருள்ளம் அலையெறி கடலினுஞ் சலன மென்ப. ஆ, பூதப் பொருட்கே புலன் துணை பன்றிப் போதப் பொருட்குப் போதும் போதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/353&oldid=856718" இலிருந்து மீள்விக்கப்பட்டது