பக்கம்:மனோன்மணீயம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் : முதற் களம் = 35. 2-ம் கை 1. அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை இன்றுமற் றன்றே, இமையவர்க் காக முன்னொரு வேள்வி முயன்றுழி வன்னி' தவசிகள் தனித்தனி யவிசு சொரிந்துந் 140. தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து மன்னனுங் குடிலனுந் துன் னிய யாவரும் வெய்துயிர்த் திருக்க, விளையாட் டாக மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து 145. மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப் புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா முனிவர் யாவரும் மணியென மொழியில் தங்கள் தலைமிசைக் கொள்வார், தரணியில் எங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே.


4-ம் நக : o 150. ஒக்கும்! ஒக்கும்! இக்குங்கி கைக்கு மன்னும் இன்மொழிக் கன்னிக் கெங்கே ஒப்புள துரைக்க! ஒ! ஒ! முனிவர் அவ்வழி யேகுநர் போலும் இவ்வழி வம்மின் காண்குதும் இனிதே. (நகரவாசிகள் போக} முதல் அங்கம் : முதற் களம் முற்றிற்று வகுப்பு 2. பெருமூச்சுவிட்டு 3. உயர்ந்தவர் 4. கரும்பு.

  • =

|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/37&oldid=856739" இலிருந்து மீள்விக்கப்பட்டது