பக்கம்:மனோன்மணீயம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் : நான்காம் களம் 55 வாணி : கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்; ஆயினும் ஐயமொன் றுண்டு; நேயமும் ஆக்கப் படும் பொரு ளாமோ? நோக்கில் 85. துன்பே நிறையும் மன்பே ருலகாம் எரியுங் கானல் விரியும் பாலையில் திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது தங்கி அங்கவர் அங்கங் குளிரத் தாரு வாய்த் தழைத்தும், ஒயாத் தொழிலில் 90. நேருந் தாகம் நீக்குவான் நிமல3 ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும், ஆறலை கள்வர் அறுபகை மீறில் உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும், முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில் 95. ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும் இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி, இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி, பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய் இல்லற மென்பதன் நல்லுயி ரேயாய், 100. நின்ற காதலின் நிலைமை, நினையில், இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பா யுருகி ஒன்றாந் தன்மை யன்றி, ஒருவரால் ஆக்கப் படும்பொரு ளாமோ? - - விக்கிய கழற்கால் வேந்தர் வேந்தே! (8) ஆமோ அன்றோ யாமஃ தறியேம்; பிஞ்சிற் பழுத்த பேச்சொழி: மிஞ்சலை; மங்கைய ரென்றுஞ் சுதந்தர பங்கர்; பேதையர் எளிதிற் பிறழ்ந்திடு முளத்தர்; 110. முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ பெரிது? மற் றவர்தமிழ் உன்னல பேண உரியவர் யாவர்? ஒதிய படியே பலதே வனுக்கே உடன்படல் கடமை. 1 கட்டளை 2. மரம் 3 குற்றமற்ற 4. வழிப்பறி செய்வோர் o 3. சோர்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/57&oldid=856784" இலிருந்து மீள்விக்கப்பட்டது