பக்கம்:மனோன்மணீயம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் : நான்காம் களம் 57 மறு த்துரை யனைத்தும் மாற்றல' ர்ேறே: - - i. (சுந்தர முனிவர் வர) ஜீவ (முனிவரைத் தொழுது) வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி: இருந்தரு ளுதியெம் இறைவ! --- ப்ரிந்து நீ வந்ததெம் பாக்கியப் பயனே. (11) கந்தர (மனோன்மணியை நோக்கி) | 135. தீதிலை யாதும்? கூேடிய மே போலும் ஏதோ மனோன்மணி? ஒதாய் - - வேறுபா டாய்நீ விளங்குமாறே. (12) மனோன்மணி : (வணங்கி) கருணையே யுருவாய் வருமுனரி சுரரே எல்லா மறியும் உம்பாற் 140. சொல்ல வல்லதொன் றில்லை சுகமே. செவிலி : (மனோன்மணியை நோக்கி) கரும்பே, யாங்கள் விரும்புங் கனியே! முனிவர் பாலுநீ யொளிப்பையே லினியிங்கு யார்வயி னுரைப்பாய் ! ஐயோ! இதுவென்? (முனிவரை நோக்கி) ஆர்வமும் ஞானமும் அணிகலனாகக்கொள் 145. தேசிக வடிவே! செப்புமா றறிகிலம் மாசறு மனோன்மணி தன்னுரு மாறி நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம். மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்; நண்ணாள் ஊசலும்; எண்ணாள் பந்தும்: 150. முடியாள் குழலும், படியாள் இசையும்: தடவாள் யாழும்; நடவாள் பொழிலும்: அணியாள் பணியுேம்; பணியாள் ஏவலும்: . மறந்தாள் கிளியும்; துறந்தாள் அனமும்: துரங்குவள் போன்றே ஏங்குவள் எளியை 155. நோக்குவள் போன்றே நோக்குவள் வெளியை: மீட்டுங் கேட்பள்: மீட்டும் பார்ப்பள் - 1. பகைவர் 2. சிங்கம் 3. குரு 4.tநீராடாள் 5. அணிகலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/59&oldid=856788" இலிருந்து மீள்விக்கப்பட்டது