பக்கம்:மனோன்மணீயம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. சேவகன் குடில : 30. 35. 45. 50. முதல் அங்கம் : ஐந்தாம் களம் 61 கூடும். கூடிலென் கூடா? யாவன்.அஃதோ வருமொரு சேவகன்![சேவகன்வர) t ஐய? ஐய! விஜய பவகுடி லேந்திரா! (திருமுகம் கொடுக்க) (வாசித்து நோக்கி) நல்ல தப்புறம் நில்லாய்! ஒ!ஒ! சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம். (சேவகன் ஒரு சாரிருந்து தாங்க. அடுத்தது போலும் இம்மணம். அவசியம் நடக்கும். நடக்கிலென்? நமக்கது நன்றே அரசர்கட் காயுள் அற்பமென் றறைவர்; பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள் வாழான் வழுதி; வஞ்சிநாட் டார்க்குத் தாழார் இந்நாட்டுள்ள ஜனங்களும். அதுவும் நன்றே-ஆயினுங் கால தாமதஞ் சாலவு மாகும்; வேறொரு தந்திரம் வேண்டும்; ஆ1 ஆ1 மாறன் மாண்டான்; மன்றலும் போனது: சேரன் இறுமாப் புடையதோர் வீரன் ஆமெனப் பலரும் அறைவர். அதனால் நாமவன் பால்விடுந் துரதுவர் நலம்போன் மெள்ள அவன்றன் செருக்கினைக் கிள்ளிற் படைகொடு வருவன் திண்ணம்; பாண்டியன் அடைவதப் போதியாம் அறிவம். - போர்வந் திடிலின் நேர்வந் திடுமெலாம் யார்இற வார்கள்? யார்அறி வார்கள்? முடிதன் அடி விழில் யாரெடுத் தணியார்? அரச வமிசக் கிரமம் ஒரில்? இப்படி யேமுத லுற்பவம் இருக்கும் சில தலை முறையாப் பலவரு டஞ்செலில் இந்துவில் இரவியில் வந்தோ ரெனவே, மூட உலகம் மொழியும், யாரே நாடுவர் ஆதியை? நன்று நன்றிது!

    • **

1. செருக்கு 2, எண்ணிப் பார்த்தல் 3. தோற்றம் (தொடிக்கம்) - சந்திரன் 5. சூரியன். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/63&oldid=856797" இலிருந்து மீள்விக்கப்பட்டது