பக்கம்:மனோன்மணீயம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மனோன்மணியம் நேரான்; மகதன் தீராத் தரித்திரன்; 55 இன்னம் பலரும் இங்ங்ணம் நமது கன்னியை விழைந்துங் கல்வி வடிவு குணம்பலங் குலம்பொரு ளென்றிவை பலவும் இணங்கா ரேமாந்திருந்தார். அரசருள் கொங்கன் றனக்கே இங்கிவை யாவும் 60. பொருத்த மாயினும் இதுவரைப் பாலியன் ஆகையில் இவ்வகையின் அணைந்திலன், எங்கனந், திருத்தமா யவன்கருத் தறிந்திடு முன்னம் ஏவுதுந் துரதரை? ஏதில னன்றே, giа т படுமோ அஃதொரு காலும்? குடில 65. மற்றவன் கருத்தினை யுணர - உற்றதோ ருபாயம் என்னுள துரையே. (5). குடில : உண்டு பலவும் உபாயம்; பண்டே இதனைக் கருதியே யிருந்தேன்; புதிய கடி புரி முடியும் முன்னர்க் கழறல் 70. தகுதி யன்றெனக் கருதிச் சாற்றா தொழிந்தேன் மாற்றல ரேறே (6). ஜீவ : -- நல்லது! குடில! இல்லை யுனைப்போல் எங்குஞ் சூழ்ச்சித் துணைவர் பங்கமி லுபாயம் என் கொல்? பகரே. (7). இடில : 75. வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச் செந்தமிழ் வழங்குந் தேயமொன் றுளது.அதன் அந்தமில் பெருவளம் அரியார் யாரே? மருதமும் நெய்தலும் மயங்கியங் கெங்கும் புரையறு செல்வம் நிலைபெற வதிரும்; 80. மழலைவண் டானம் புலர்மீன் கவர - * ஒம்புபு துளைச்சியர் எறிகுழை தேன் பொழி புன்னை நுண் தாதாற் பொன்னிறம் பெற்ற எருமையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும் கொங்கு நாட்டரசன் (சேர மன்னன் புருடோத்தமன்) ாஞ்சில் நாடு , 3. . நாரை 4. உலர்ந்த மீன் (சருவாடு) 1. 2. ந 5. செம்படவப் பெண்கள் 6. காதணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/68&oldid=856807" இலிருந்து மீள்விக்கப்பட்டது