பக்கம்:மனோன்மணீயம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கம் : முதற் களம் ■ 67” அலைகடற் காக்கை கலக்கண் விளக்கும்: 85. கேதகை மலர்நிழல் இனமெனக் கருதித் தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கலர்த் தாதே; வால்வனை சூலுளைந் தீன்ற வெண் முத்தம் ஒதிமக் குடம்பை யென் றுன்னுட காலாற் == 90. பருந்தினங் கவர்ந்து சென்றடம் பிடைப் புதைக்கும். கரும்படு சாலையின் பெரும் புகை மண்டக் கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்; அலமுகந் தாக்குழி யலமரும் ஆமை 95. துளைச்சியர் கணவரோ டிழைத்திடும் ஊடலில் வழித்தெறி குங்குமச் சேற்றிடை யொளிக்கும்; பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடும் அன்றில் நளிமீன் கோட்பறை விளிகேட் டுறங்கா; வேயென? வளர்ந்த சாய்த்து லைச் சாலியில்,8 100. உப்பார் பஃறி யொருநிரை பிணிப்பர், இப்பெருந் கேயத் தெங்கும் இராப்பகல் தப்பினும் மாரி தன்கடன் தவறா. கொண்மூ49 வென்னுங் கொள்கலங் கொண்ட அமிழ்தினை யவ்வயிற் கவிழ்த்தபின் செல்வுழி 105. வடியும்நீ ரே நம் மிடிதீர் சாரல் நன்னிர்ப் பெருக்கும் முந்நீர் நீத்தமும்' எய்யா தென்றும் எதிர்த்திடும் பிணக்கில் நடுக்கடல் நன்னிர் சுவைத்திடு மொருகால், மரக்கலம் வந்திடும் வயற்கரை யொருகால், 110. வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம் ஒமென வேஇறந் தொலிக்கப் பிரணவ நாதமே தொனிக்குமந் நாட்டிடை யொருசார், நறுமலர்க் குவளையும் நாணிறத் திரணமும்' படர்தரும் பழனக் கம்பளம் பரப்பித் 115. தாமரை துாமுகை துரமமில் விளக்கா, நிலவொளி முத்தும் கவடியுேம் பணமா அலவன்' பலவிர லாலாய்த் தெண்ண, 1. தாழை 2. அன்னத்தின் முட்டை 3. கொடி 4. எருமை: ப. கலப்பை,துணி 6. மனம் த்டுமாறும் 7. மூங்கில் போன்று 8. நெல்: ப. முடம் 10. மேசம் 11. வெள்ளம் 12. உப்பளம் 13. வயல் 11. மொக்கு 15. புகை யில்லாத 16. சோழிகள் 17. நண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/69&oldid=856809" இலிருந்து மீள்விக்கப்பட்டது