பக்கம்:மனோன்மணீயம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o:58 மனோன்மணியம் துகிர்க்கா லன்னமும் புகர்க் கால் கொக்குஞ் செங்கட் போத்துங் கம்புட் கோழியுங் 120. கனை குரல் நாரையுஞ் சினமிகு காடையும் பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும் என்றிவை பலவும் எண்ணில் குழிஇச் சிரஞ்சிறி தசைத் துஞ் சிறகை யடித்தும் அந்தியங் காடி’யின் சத்தம் காட்டித் 125. தந்தங் குழு உக்குரல் தமைவிரித் தெழுப்பும் பேரொலி யென்றுமே யார்தரு மொருசார்: வீறுட்ை யெருத்தினம் வரிவ்ரி நிறுத்தி ஈறிலாச் சகரர் எண்ணிலா ராமெனப் 130. போற்றி குரவையே பொலிதரு மொருசார்; சேற்றிடை யடர்ந்த நாற்றடைத் தெடுக்குநரி நாறு கூறாக்குநர் வேறு புலம் படுக்குநர் நடுவர் களைப்பகை யடுபவ ராதியாக் கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டும் 135. தருமொலி பரந்தே தங்குவ தொருசார்; குன்றென அரிந்து குவித்திடுஞ் செந்நெற் போர்மிசைக் காரா காரெனப் பொலியக் கரங்குங் கிணைப்பறை முழவுடன் பிறங்கும் மங்கல வொலியே மல்குவ தொரு சார்; 140. தூவியால் தம்முடல் நீவிடில் சிரிக்குஞ் சிறுமிய ரென்ன அச் செழுநில நங்கை உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி உடல் குழைந் தெங்கும் உலப்பறு செல்வப் பயிர்மயிர் சிலிர்த்துப் பல்வளம் நல்குவள் 145. எனிலினி யானிங் கியம்புவ தென்னை? அனையவந் நாடெலாம் அரச! மற் றுணக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும், சின்னா ளாகச் சேரனாண் டிடினும் இந்நாள் வரையும் அந்நாட் டுரிமை - 150. கொடுத்தது மில்லை நாம் விடுத்தது மில்லை, பண்டைநம் உரிமைபா ராட்டிட வென்றே கண்டனன் இப்புரி ஆயினும் அது.இம் - ----- 1. மங்கிய செந்நிறம் 2. மாலை நேரக் கடை (Evening Bazaar) 3. நிறையும் 4. குழுப்பாட்டு 5. உழத்தியர் 6. ஒலிக்கும் 7. தடாரி என்னும் ம்ருதநிலப் பறை 8. கேடில்லாத l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/70&oldid=856813" இலிருந்து மீள்விக்கப்பட்டது