பக்கம்:மனோன்மணீயம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கம் : இரண்டாம் களம் 77 தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டமாய் அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை 25. அஞ்சிறை யொத்தறுத் தடியா எஞ்சலில் இசையறி மாக்களின் ஈட்டம் போல வசையறு பாடல் வழங்கலும் இனிதே! அதுவென்! ஆஹா? அலகா, லடிக்கடி தந்தையுந் தஞ்சிறை தடவி விளக்கிக் 30. அதுவுங் காத லாணையிட் டன்றந்து பின்புசென் றோயா தன்புபா ராட்டும் இவ்விரு குருகுங் காதலர். கண்டும் அவர்நிலை காணார் போல்துகிர்த் துண்டங் கொண்டு பாலைச் சொரிந்த 35. பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி உழையுழை ஒதுங்கி யோடிப் போலிக் கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே. ஆடவர் காத லறைதலுந் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும். 40. வாணி! மங்காய்! வாழி நின்குணம்! ஒருதினம் இவ்வயின் உனை கான் கண்டுழி முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத் - தந்ததை யன் பாய் மந்தகா சத்தொடு -- வாங்கியு மதியா தவள்போ லாங்கே 45. ஒடுமல் வாய்க்கால் நீரிடை விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை. ஏதியா னெண்ணுவ னோவென வுடன் நீ கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும். அழுங்கலை வாணி! அறிவேன்! அறிவே ன்! 50. உளத்தோ டுளஞ்சென் றொன்றி.டிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும்(உற்றுச் செவி கொடுத்து) "வாணி என்றபேர் கேட்டனன்! யாரது? காணின் நன்றாம். காரிகை யார்கொல்? |பலதேவனும் ஒரு நற்றாயும்...தோழனும் தொலைவில் வர! சொல்வதென்1 சூழ்ச்சியென்! கேட்டுதும் மறைந்து 1. ஒசையிட்டு 2. நெருங் கும். 3. அறிந்தும் அறியாதிருத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/79&oldid=856830" இலிருந்து மீள்விக்கப்பட்டது