பக்கம்:மனோன்மணீயம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம் : முதற் களம் 95 திருவும் வெருவும் உருவும், பெருகும் அருளுறை யகமும், மருளறு முணர்வும், முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன்... அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக் 25. குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில். செறித்திடும் சிறையினையுடைத்திடும் - புனல்போல் தாங்கா மதிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால் தலையா லோடி வருவன்; உனக்கு மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே! ("φ.60 : 30. முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் என நாம் நினைப்பதற்கில்லை, நம் அமுதின் எழிலெலாம் எங்ங்ணம் முனி வோர் மொழிவரி? துறந்தார் கவைதாம் தோற்றுமோ மறந்தும்? சிறந்த நூல் உணர்வும் தெளிந்தோர் உளமும் 35. செப்பினர் என்றி.டில் ஒப்பெலாந் தகைத்தே. ஆயினும், மலைநாட் டரசன் நமது தாயின் தன்மை சகலமும் இப்போது அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை. நெறிமுறை சிறிதும் பிறழா நினது 40. தூதுவன் யாவும் ஒதுவன் திண்ணம் அம்மா! தனியே அவன்பல பொழுதும் மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி அவயவத் தழகெலாம்_மாறா தறைந்தறைந்து. இமையவர் தமக்கும் இசையுமோ இவளது . 45. பணிவிடை? நமது பாக்கிய மன்றோ அணிதாய் அருந்திவட் காம்பணி யாற்றுதும்? என்றுமிப் படியே இவள்பணி விடையில் நின்றுநம் உயிர்விடில் அன்றோ நன்றாம்? என்றவன் பலமுறை யியம்பல் கேட்டுளனே. 50. ஐயமோ? குடி லா மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன் சித்த மென் குல திலகமாந் திருவுடன் 1. தடை 2. மயக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/97&oldid=856868" இலிருந்து மீள்விக்கப்பட்டது