பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பெருமையும் இனிமையும் புலப்படுவதோடு அப்பாஷை வளர்ந்து நிலைபெறுதலும் உண்டாவது ஆதலால் நமது சமஸ்தானத்தில் பிறந்து வளர்ந்து நமது சமஸ்தானத்து அன்ன பிரபாவத்தினாலேயே தமிழ்க் கல்வியில் பூரண பாண்டித்தியமுடையவராய் ராவ்பகதுார் பி அரங்கநாத முதலியார் முதலிய பல கல்வியில் பெரியோர்கள். மிகச் சிறப்பித்து எழுதிய மகாவித்துவானாய் அனேக வருடங் களாக நமது சேது சமஸ்தானத்துத் தலைமைத் தமிழ் வித்துவானாய் உள்ள தாங்கள் தமிழ் நூ லுரைகள் முதலியன செய்கின்றதனாலும் தமிழிலுள்ள அரிய பெரிய விஷயங்களைப் பலர் க்கும் உபந்யசித்தலாலும் அனேகர்க் குப் பூர்வீகத் தமிழ் பாஷையைப் போதித்து வருதலா னும் கிடைத்தற் கருமையாயுள்ள பழைய தமிழ் நூல் களைத் தேடிச் சேர்த்தலானும் அவற்றைப் பரிசோதித்த லானும் வெளியிடுதலாலும் இன்னும் பல நன்முயற்சி களாலும் தமிழ் பாஷையை நன்றாய் வளர்ப்பவர்களா யும் நமது சமஸ்தானத்துச் செந்தமிழ் பfrாதிகாரத் தலைவராயும், நமது சமஸ்தானத்து வித்வத் அங்கத்தில் பரம முக்கியராயும், இருத்தலை யாலோசித்து தங்கள் போன்ற பண்டிதர்களையும் ஐவேஜி இல்லாத கோவில் சத்திரம் பாடசாலை ஏழைகள் முதலியவர்களையும் பாதுகாப்பதற்கென்று தொன்றுதொட்டு ஏற்பட்டுள்ள நமது சமஸ்தானத்துத் தர்மமகமை ஐவேஜியினின்று தக்க தமிழ்வித்வானானடதங்களுக்கு-காலஆேபாதிகளுக்குச் சென்னத்-இரவிய-சகா-தெற்_கொடுத்த வேண்டுவது-இச் சமஸ்தானத்தின்_முக்கிய_தர்மமும், அதுவே. நமது முந்திய சேதுபதிகள் வழக்கமுமாதலால் தங்களுக்கு மாதம்-க்கு ரூ.50க்குக் குறையாமல் கிராண்ட் ஏற்படுத்தி டிெ தர்மமகமை ஐவேஜியில் தங்கள் ஆயுட் காலப் பரியந்தம் மாற்றப்படாத முக்கிய ஸ்திரமான ஐட்டமாக வைத்துத் தங்களுக்குச் செல்லாக்கி வரும்படி 1900-u பிப்ாவரி-மாதம்-21உயில்-நம்மால் டிெ தர்ம மகமைக்குப் ப்ரொஸி டிங்ஸ் எழுதப்பெற்று தாங்களும் மாசம் 1-க்கு 50ஆக மேற்படி மகமை ஐவேஜியில் பெற்று வருகின்றீர்கள். இப்போது நாம் நமது சமஸ்தான தர்மமகமை சம்பந்தமாக ஸ்திரமான ஏற்பாடுகள்