பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1) 2) 4) சோதுகுடி புலவர் எம். கே. எம் அப்துல் காதிர் ராவுத்தர் அறந்தழைப்பத் தமிழ்தழைப்ப அருள் தழைப்ப தெருள் தழைப்பச் சிறந்தமுத்து ராமலிங்க சேதுபதி செயுந்தவத்தால் கறந்த செழும் பாலனைய கரங்குலவும் இளங்கதிர் போல் பிறந்தனனோர் குமரன் அவன் பெருமையெவர் பேசாரே ! பவப்பனியும் புலவர் கலிப் பகையிருளும் பயந் தொளிப்பத் தவச்சலசச் செழுமலரும் தமிழ்மாதின் அகமலரும் உவப்புடனே விரிந்து இலங்க உதித்த அதன் சிறப்பு அனைத்தும் எவர்க்கும் அறிவுறுத்தும் வகை இசைத்தனர் பாற்கரன் எனும் பேர். ஆங்கிலமும் ஆரியமும் ஆந்திரமும் அறியினமா ஓங்கிய செந்தமிழமுதை உட்கொண்டு வளர்வுற்ருன் விங்கிய பூப் புயம்தாங்கி விண்ண வரும் மண்ணவரும் பாங்குறச் செய்தான் முறை யப்பாற்கர பூபதியம்மா. குடமுனியோ அவன் பால் நால்கொண்டு அமர் தொல் காப்பிய னோ படமுடைய பணி இறையோ பாரதம்பாடிய தவனோ மிடலுறு அன்னவன் கல்வி விளம்புவ தென் என வியப்பக் கடலமு தப் பெருக்கென்னக் கவிபிரசங்கம் புரிவான்.