பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 9 கில இசை - ஆகியவற்றிலும் அவர்கள் சிறந்து விளங்கி னர். மேலும், தமிழ் இலக்கியங்களிலும், சைவ வைண வத் திருமுறைகளிலும் தேர்ச்சி பெற்றுத் திகழ்ந்தனர். இங்ங்னம், பத்தாண்டுகள் பட்டினத்தில் தொடர்ந்த கல்விப் பயிற்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் ஆங்கில நாட்டு ஆசான்கள் பொறுப்பாக இருந்ததால், எந்தப் பொருள் பற்றியும் இடர்ப்பாடு எதுவும் இல்லாமல் தன்னிச்சையாக ஆய்ந்து, சிந்தித்து அறிந்துகொள்ளும் உரனும், அறிந்துகொண்ட பொருளை அழகாக ஆங் கிலத்திலும் தமிழிலும் வெளியிடும் பேச்சுத் திறனும் அவர்கள் ஒருங்கே பெற்றனர். அன்றைய நிலையில் ஆட்சியாளருக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளை யும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் அவர்களைப் பயில் வித்த ஆட்சிக் குழுவிற்கும், பொறுப் பாளர்களுக்கும் குறிக்கோளாக இருந்தது அந்த வெற்றி யனைத்தையும் பெற்றவராக அந்த ~~y [г«Ғ மக்கள் வளர்ந்தனர். இளவரசர் பாஸ்கரரது பள்ளி வாழ்க்கை தொடர்ந் தது. பதினேழு வயது நிரம்பும் தறுவாயி ல் தஞ்சைத் தரணியில் உள்ள சில ஆலயங்களுக்கு அவர் சென்று வந்தார் அப்பொழுது திருவாவடுதுறைக்கும் சென்றார். அங்குள்ள ஆதினத்திற்கும், இராமநாதபுரம் சேது மன்னர்களுக்கும் பதினேழாவது து ற்றாண்டிலிருத்து தொடர்புகள் இருந்து வந்தன. இராமநாதபுரம் சீமை யின் வடக்கு எல்லையை, தஞ்சைத் தரணிக்குள்ளும் விரித்த திருமலை ரகுநாத சேதுபதி, கிழவன் ரகுநாத சேதுபதி, 'முத்துராமலிங்க விஜய ரகுநிாத சேதுபதி மன்னர்கள் இந்த ஆதி ன கர்த்தர்களின் சமயப் பணியில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்களாக அந்த ஆனேத்தின் பராமரிப்பிற்காக, தங்களது சேது நாட்டில ஆவுடை யார் கோவில், வல்லக்குளம். சூரியன் கோட்டை, பொற் கோட்டை, பூதகுடி, சிறுகாைர், பெருங்காடு. கட்டி யேரி, கங்கணி, நாஞ்சி வயல், நானக்குடி முதலிய ஊர் களை ஆதீனத்தாருக்கு தானமாக வழங்கி இருந்தனர். இத்தகைய சிறந்த AF I TI ILI ஆதரவாளர்களான சேதுபதி மன்னர்களைத் திருவாவடுவதுறை ஆதீனங்கள்