பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26; கும்மியாகவும் இன்னொரு புலவரான சின்னையாபிள்ளை 'திருமண-ஊசலாகவும்' படைத்துள்ளனர்.o - - میب--سے இந்த திருமணம் நடைபெற்ற சில நிமிடங்களில், மன்னருக்கும் சிவபாக்தியம் நாச்சியார் என்ற மங்கை நல்லா ளுக்கும் அரண்மனை அந்தப்புரத்தில் மற்றுமொரு திருமணமும் நிறைவேறியது. ஏற்கனவே, கும்பெனியார் இந்த இரண்டாவது திருமணத்திற்கு அனுமதி மறுத்த தால், உறவினர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் தனியாக நடந்தது. சுற்றத்தாரிடையே பகைமை உணர் வும் பூசலும் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏற்கனவே அவ ரது தாயாரால்-நிச்சயிக்கப்பெற்ற இரு பெண்க ளில் ஒருவர்ை முதலில் மனந்தார்-அடுத்த பெண் ணுக்கு ஏற். படும் தலைக்குனிவையும் மனக் குழப்பத்தையும் தவிர்ப்ப தற்காகவே இரண்டாவது இருமனத்திற்கும் கன்னர் உட்ன் பட்டார். மன்னரது துரத்து உறவினரான தூவல் கிராமம் கண் ச்சாமித்தேவர். தம மகள் சிவபாக்கியத்தை ... சேல்ே அழைத்து వేధసే 1885ல் மன்னரது தாயாரிடம் ஒப்படைத்து திருமணத் திற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரினார். துரைத்தனத் தாரின் முன்னனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தின் பொழுது, ராணியின் இன்னொரு உறவினரான களரி கிராமம் சேதுராஜா தேவர் அவரது மகள் மங்களேசு வரியை மன்னருக்குத் துணைவியாக ஏற்றுக்கொள்ளு மாறு ராணியை வற்புறுத்தி வந்தார். இருவரும் மன்னரது உறவினர்கள். இவர்களில் யாராவது ஒருவரைப் புறக் கணித்தாலும் சுற்றத்தாருக்குள்_மனவருத்தம் ஏற்படுவது இயல்பு. ஆதலால் இருவரையுமே மனப் பெண்களாக வரித்துக்கொள்ளும் நிர்ப்பந்தம் மன்னருக்கு ஏற்பட்டது. இருபது ஆண்டுகள் நிறைவு பெற்ற இளம்மன்னர் பாஸ்கரது இல்லறம் நல்லறமாக நடத்தது. மனை மாட்சி o இந்த இருபடைப்புக்களும் இந்த நூலின் இறுதியில் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.