பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 திறனையெல்லாம் நன்கு அறிந்தவராக இருந்ததால், சமஸ்தானத்தின் செம்மையான நிர்வாகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டார். முதல் நடவடிக்கையாக சமஸ் தானப் பகுதிகளுக்கு பல்லக்கில் பயணம் செய்து தம் முடைய குடிமக்களது வாழ்க்கை நிலையையும், மனோ பாவத்தையும் நேரில் கண்டறிந்தார். இரண்டாயிரத்து காற்றுடனழுத்து-கிராமங்களையும் அவற்றில் இருந்து ஆண்டு வருமானமாக சுமார் எட்டு லட்சம் ரூபாய் வரு வாயும் கொண்டுள்ள அப்போதிைய இராமநாதபுரம் சமஸ்தானத்தின் காலங்கடந்த பல தேவைகளை உடனடி யாக நிறைவேற்ற முயன்றார். குறிப்பாக இரண்டு லட்சம் ரூபாய் செலவில் திருப்புல்லாணி-திரு-உத்தர கோசமங்கை-திருவாடானை-திருச்சுழியல் திருக் கோயில்களின் திருப்பணியை மேற்கொண்டார். மதுரை லும் சென்னையிலும் உள்ள துரைத்தனத்தாரின் உயர் அலுவலர்களை அணுகி பல கண்மாய்களை ப் பழுது பார்ப்பதற்கும் ஆவன செய்தார். ஆங்கில மொழியை. எழுத்திலும் பேச்சிலும். இனி மையும் அருமையும் அமையக் கையாளும் திறனும், யாவரிடமும் அன்பாகக் கலந்து உரையாடும் தேர்ச்சி யும் பெற்றிருந்த மன்னரிடத்தில், கவர்னர், கலைக்டர் முதலிய அதிகாரிகளும், ஜமீன்தார்களும், சமஸ்தானாதி பதிகளும், கனிவும் மதிப்பும் கொண்டு பழகி வந்தனர் இந்திய அரசு அவருக்கு 'மகாராஜா என்ற சிறப்பு விருதை வழங்கிக் கெளரவித்தது. அவரும் உண்மையான 'மகாராஜா' வாகவே வாழ வேண்டும் என விழைந் தார் என்பதை அவரது அறக்கொடைகளும் அரிய செயல் களும் நமக்குப்,புலுழ்படுத்துகின்றன. பாஸ்கர சேதுபதி மன்னருக்கு மு ாறு ஆண்டுகள் வரை இராமநாத புரம் சீமைய்ை ஆண்டு வந்த சேதுபதி மன்னர்கள் திருமலை ரகுநாத சேதுபதி (கி பி. 1646-74) முதல் முத லாவது முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி மன்னர் (கி.பி. 1762 - 1795) வரை எந்த அரசுக்கும் கட்டுப்படாத கப்பம் செலுத்தாத - தன்னாட்சி மன்னர்களாக இருந்து