பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வழக்கமாக இருந்தது. மகா வைத்தியநாதையர், பட்ட ணம் சுப்பிரமணிய ஐயர் போன்ற பெரும் மேதைகள் மன்னரிடம் மிகுந்த பெருமதிப்புக் கொண்டவர்களாக அடிக்கடி வருகை தந்து மன்னரது விருந்தினராக இருந் தனர் இங்கனம் பாஸ்கர சேதுபதி மன்னர் இசைக்கலை யில் புரவலராக ஆர்வலராக மட்டுமல்லாமல் தாமே இசையை அனுபவிக்கும் சிறந்த இசைக்கலைஞராகவும் திகழ்ந்தார். சிறந்த வித்வான்கள் அவரைக் கண்டு தமது திறமைக்கு பரிசு பெற வரும்பொழுது அவர்களுக்கு இசைப் பாடல்களையும், ராகத்தையும் குறிப்பிட்டு, அவைகளை இசைக்குமாறு செய்து ஏற்ற பரிசில்களை வழங்கினார். ஒரு முறை இராமநாதபுரம் அரண்மனை க்கு, மகா வித்வான்கள் மகா வைத்யநாத ஐயரும், பட்டம் சுப்பிர மணிய ஐயரும், குன்றக்குடி கிருஷ்ண ஐயரும் வந்து இருந்தனர் இந்த மூன்று வித்வான் களது இசைத் திற மையைத் தனித்தனியே பலமுறை கேட்டு, அறிந்து ரசித் தவர் மன்னர். ஆதலால் இம் மூவரையும் ஒன்றாக இணைத்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால் என்ன என்று அவரது சிந்தனை ஒரு நொடி சுழன்றது அன்று மாலையில் இராமலிங்க விலாசம் அரண்மனையில் மிகச் சிறந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வரலாறு காணாத வாய்ப் பாக மன்னரும் மக்களும் ரசித்து பரவசமடைந்தனர். மகாவைத்யநாதர் ராகம் பாட, பட்டணம் சுப்ரமணிய ஐயர் தாளம்போட குன் னக்குடி கிருஷ்ண ஐயர் பல்லவி பாடினார். முக்கணிப்பந்தரில் தேன் மாரி சொரிந்தது. சோனை மாரியாக. திருப்புல்லாணியில் பிறந்து, தென்னகத்தில் ஒப்பற்ற லட்சன வித்துவானாக விளங்கிய பூச்சி சினிவாச ஐயங் காரை தமது தர்பாரில் கெளரவித்து தமது சமஸ்தான வித்வான்’ என்ற பெரும் பேற்றையும் அவருக்கு அளித் தார். இந்தப் பாடகரது இயற்பெயர் சீனிவாசன். எழி o இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியை அளித்தவர். மதுரையில் உள்ள இசைப் புலவர் சங்கீத மணி திரு. C.S. சங்கர பாகவதர் அவர்கள்.