பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வயது நிரம்பப் பெற்ற மைந்தன் ராஜராஜேஸ்வர முத் துராமலிங்கம், சிவனடியார்களது காவியுடைபற்றி இழிவாகக் குறிப்பிட்டதற்காக, அந்தப் பிஞ்சு உள்ள தி தின் பேதமையை நீக்க, ஏறத்தாழ ஒரு மணி நேரம் விளக்கம் சொல்லி இளவரசர் மனத்திலே இறை யுணர்வை நிரப்பி மகிழ்ந்தார்" . இங்ங்னம் கேட்டார் பிணிக்கும் தகைமையும் , கேளார் உவக்கும் பேச்சுத் திறனும் கொண்ட மன்னர் ஏதாவது ஒரு பொருள் பற்றி விளக்கம் சொல்லத் தொடங்கினால், அவரது உரை தங்குதடையில்லாத ஆற் றொழுக்காகத் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதி லும் உண்னும் நேரத்தில் விருந்தாளிகள் யாரும் பேச்சைத் துவக்கினால், மன்னர் தமக்கு முன்னால் உணவு படைக்கப்பட்டு இருப்பதை முற்றும் மறந்து பேசிக்கொண்டே இருப்பார். உணவு பரிமாறும் பணி யாளருக்குத்தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஏனெனில் நேரம் ஆகும்பொழுது மன்னரது இலையில் உள்ள உணவுப் பண்டங்களது சுவையும் இனிமையும் மாறிவிடும் என்பதால் பணியாளர் அந்த இலையை மெதுவாக நகர்த்தி அப்புறப்படுத்தி விட்டு, புதிய இலையில் மன்ன ருக்கு மறுபடியும் உணவுப்பொருட்களைப் பரிமாறுவார். சில நாட்களில் இவ்விதம் மூன்று முறை இலை மாற்றம் செய்ததும் உண்டு. விருந்தினருக்கு இத்தகைய நிகழ்ச்சி புதுமையாகத் தோன்றும். ஆனால், பாஸ்கர சேதுபதி மன்னர் காலத்தில் இத்தகைய நிகழ்ச்சி இராமநாதபுரம் அரண்மனையில் இயல்பான நிகழ்ச்சியாக இருந்து வந் தது. மன்னரது பேச்சில் இன்ன கருத்து விடுபட்டது என்று யாரும் சொல்ல முடியாத வகையில் பேச்சுக்கள் முழுமையும் பொருள் செறிந்தவையாக இருக்கும். மேலை நாட்டு அறிஞர்களது கொள்கைகளும், தத்துவங்களும் மேற்கோளாக அமைந்து கேட்போருக்கு பெரு விருந் தாக இருக்கும். 21. Madurai Mail – 20-1–1894