பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பூசையில், முழுவதுமாகக் கலந்து கொண்டு, சுவாமி, அம்பாள் திருமேனிகள் பள்ளியறைக்கு எடுத்துச்செல்லப் படும் பொழுது பல்லக்கிற்கு முன்னர் மிகவும் எளியவ ராக தங்கத் தீவட்டி தாக்கி தொண்டு செய்வதை வழக்க மாகக் கொண்டிருந்தார். அப்பொழுது வழங்கப்படும் நைவேத்தியங்களான அன்னம், குழம்பு, வடை ஆகிய வற்றைப் பெற்று உண்பதைப் பெரும் பேறாக நினைத் தார். இதைப் போன்றே, சென்னையில் தங்கியிருக்கும் பொழுது எல்லாம், ழயிலை கபாலீசுவரர் ஆலய அர்த்த சாம பூசையில் கலந்து கொள்வதை வழக்கமாக் கொண் டிருந்தார். அதற்கான கட்டளை ஒன்றையும் அங்கு நிறுவினார். அந்தக் கோயில் அர்த்தசாமப் பூசையின் பொழுது சுவாமி ஆரோகணித்துச் செல்லும் வெள் விப்_பல்லக்கு, மன்னரால் வழங்கப்பட்டதாகும். மேலும், திருக்கோயில்களுக்குச் செல்லும் பொழுது, ஏதாவது ஒரு சிறந்த பொருளை அந்தந்தக் கோயில் களு க்குத் தானமாக வழங்கி மகிழும் பழக்கமுடையவராக இந்த சேதுபதி மன்னர் இருந்தார். இராமேசுவரம் பர்வத வர்த்தினி அம்மனைத் தரிசிக்கச் சென்ற பொழுது, அந்த அம்மனுக்கு வைரக்கொலுசு ஒன்றினை அளித்து, அம்பிகையின் திருவடி அழகினைக் கண்டு களிகூர்ந்தார். இன்னொரு முறை, திருப்புல்லாணி ஆதி-ஜகந்நாதரது திருக்கோவிலுக்குச் சிென்ற_பொழுது, தாம் அணிந்து இருந்த வைரக்கடுக்கன் களையும்’ ’. எழுபத்து ஆறு பவுன் எடையுள்ள திங்கப்பூனூலையும் வைரக்கிாட்ம், ஹஸ்தம் ஆகியவற்ாைக-சுழற்றிக் கொடுத்து பெருமாளுக்கு அணிவித்து மகிழ்ந்தார். திரு உத்தரகோச மங்கை மங்களநாதசுவாமி தரிசனத்தின் பொழுதும் அவர் அணிந்து இருந்த தங்க அரைஞாண், வைரம் அழுத்திய இடுப்புப்பட்டை, முத்துமாலை ஆகியவற்றை அளித் _ 22. இந்த வைரக்கடுக்கன் க ளின் அப்பொழுதைய மதிப்பு ஒரு லட்ச ரூபாய் (25 காரட் நிறை) இராமநாதபுரம் சமஸ்தானம் - திருப்புல்லாணி தலைபுராணம் (1968) பக்கம். (1)